ஹெட்மயர், தீபக் சஹர், அவேஷ் கான்.. சிஎஸ்கே மட்டும் வாங்கிவிட்டால் போதும்.. அஸ்வின் சொன்ன மேட்டர்! | Ravichandran Ashwin comment on CSK retentions and Target players in the IPL Mini Auctio

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

சென்னை: ஐபிஎல் மினி ஏலத்தில் தீபக் சஹர், அவேஷ் கான், ஹெட்மயர் ஆகியோரை வாங்க சிஎஸ்கே அணி முயற்சிக்க வேண்டும் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். துஷார் தேஷ்பாண்டே மற்றும் ஒரு தமிழ்நாடு ஸ்பின்னரையும் வாங்கிவிட்டால், சிஎஸ்கே அணியை கட்டுப்படுத்தவே முடியாது என்றும் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் ரிடென்ஷன் செய்த வீரர்களின் பட்டியலை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது. மொத்தமாக 11 வீரர்களை சிஎஸ்கே அணி ரிலீஸ் செய்துள்ள நிலையில், அஸ்வின் தனது கருத்தை பேசியுள்ளார். அதன்படி, சிஎஸ்கே அணி இம்முறை பெரிதாக வித்தியாசமாக ரிடென்ஷன் எதையும் செய்யவில்லை. எல்லாவற்றையும் நாம் கணித்ததை போலவே செய்திருக்கிறது.

Ashwin

சிஎஸ்கே அணி ஹெட்மயரை குறி வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். லிவிங்ஸ்டன் இருந்தாலும், ஹெட்மயரை வாங்க முனைய வேண்டும். லிவிங்ஸ்டன், பிரெவிஸ் ஆகியோர் ஒருவேளை சிறப்பாக விளையாடவில்லை என்றால், ஹெட்மயரை களமிறக்க முடியும். அதேபோல் பவுலிங்கில் சிஎஸ்கே அணி நிச்சயமாக 2023 ஐபிஎல் தொடரில் ஆடிய பவுலர்களை குறி வைக்கும்.

அந்த பாதையில் தான் சிஎஸ்கே அணி பயணிக்கும் என்று நினைக்கிறேன். தீபக் சஹர், துஷார் தேஷ்பாண்டே, பதிரானா ஆகியோரை வாங்க வாய்ப்புகள் உள்ளது. ஒருவேளை கார்த்திக் சர்மாவை ரிலீஸ் செய்திருந்தால், சிஎஸ்கே அணியின் பர்ஸ் அதிகமாக இருந்திருக்கும். எனக்கு அது மட்டும்தான் ஒரே வருத்தம். அவேஷ் கானை வாங்க சிஎஸ்கே முயற்சிக்கும் என்று நினைக்கிறேன்.

சிஎஸ்கே அணி வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரை கொண்டு வருமா என்பது சந்தேகம் தான். பதிரானாவுக்கு முன் ஒரு இளம் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரை கொண்டு வந்து சிஎஸ்கே அணி வாய்ப்பு கொடுக்கவே இல்லை. அதனால் சிஎஸ்கே அணி வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரை கொண்டு வந்தாலும், அவர்களால் சேப்பாக்கம் மண்ணில் சிறப்பாக செயல்பட முடியுமா என்ற கேள்வி உள்ளது.

ஸ்பின்னரை பொறுத்தவரை தமிழ்நாட்டு வீரர் ஒருவரை அடையாளம் காண வேண்டும். திறமை இருந்தால் உடனடியாக களமிறக்கி வாய்ப்பு அளிக்க வேண்டும். இந்த முறை சிஎஸ்கே அணி மேலே எழுந்து வரும் என்றே நினைக்கிறேன். தோனி ஆலோசகராக இருக்கும் போது, சிஎஸ்கே அணியை எளிதாக எடை போட்டுவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *