உங்கள் மனசாட்சியிடம் ஒரு கேள்வி:
இன்று காலை எழுந்து, அடித்துப் பிடித்து அலுவலகம் ஓடி, மாலை வீடு திரும்பி… இப்படி ஒரு இயந்திரம் போல உழைத்துக்கொண்டிருக்கிறீர்களே, இது எதுவரை? இன்னும் 15 அல்லது 20 வருடங்கள் கழித்து, “இனி என்னால் உழைக்க முடியாது, எனக்கு ரெஸ்ட் வேண்டும்” என்று நீங்கள் நினைக்கும் ஒரு நாள் வரும். அந்த ஓய்வுக்காலத்தில், யாரிடமும் கையேந்தாமல், உங்கள் தேவைகளை நீங்களே பார்த்துக்கொள்ளும் அளவுக்கு உங்களிடம் இப்போது போதுமான சேமிப்பு இருக்கிறதா?
பெரும்பாலான மிடில் கிளாஸ் குடும்பங்களின் பதில் “இல்லை’ என்பதுதான். பலரும் “பி.எஃப் (PF) பணம் வரும், அதோடு கொஞ்சம் சேமிப்பு இருக்கிறது, அதை வைத்துப் பார்த்துக்கொள்ளலாம்” என்று ஒரு தப்புக் கணக்குப் போடுகிறார்கள்.

உதாரணமாக, நீங்கள் ஓய்வு பெறும்போது உங்கள் கையில் ஒரு பெரிய தொகையாக 50 லட்சம் ரூபாய் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இதை அப்படியே பாதுகாப்பாக ஒரு பேங்க் எஃப்டியில் (FD) போடுகிறீர்கள். 7% வட்டியில் மாதம் சுமார் 29,000 ரூபாய் உங்களுக்குக் கிடைக்கலாம். “அப்பாடா, 50 லட்சமும் அப்படியே இருக்கிறது, மாதம் 29 ஆயிரமும் வருகிறது” என்று நீங்கள் நிம்மதியாக நினைக்கலாம். ஆனால், உண்மையான வில்லன் ‘பணவீக்கம்’ (Inflation) வடிவில் உள்ளே நுழைவான்!
இன்று 29,000 ரூபாயில் ஓடும் உங்கள் குடும்பச் செலவு, இன்னும் 10 ஆண்டுகளில் பணவீக்கத்தின் தாக்கத்தால் 60,000 ரூபாயாக மாறும். வயதான காலத்தில் மருத்துவச் செலவுகளும் (Medical Inflation 14%) கூடிக்கொண்டே போகும். அப்போது உங்கள் பேங்க் வட்டி வெறும் 29,000 மட்டுமே தரும். மீதிப் பணத்துக்கு என்ன செய்வீர்கள்? உங்கள் 50 லட்ச அசலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் செலவழிக்கத் தொடங்குவீர்கள். ஒரு கட்டத்தில் உங்கள் அசல் முழுவதுமாகக் கரைந்து போய், “யாருடைய உதவியையாவது எதிர்பார்க்கலாமா?” என்ற வலி மிகுந்த நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள்.

தீர்வுதான் என்ன? 1 கோடி + 30,000 மேஜிக்!
உங்களின் அசல் ஒருபோதும் கரையக் கூடாது. அதே சமயம் உங்கள் மாதாந்திரத் தேவையும் பூர்த்தியாக வேண்டும். இதற்கு ஒரே ஒரு பிராக்டிகலான வழி ‘மியூச்சுவல் ஃபண்டுகள்’ (Mutual Funds) மட்டுமே!
நீங்கள் வேலை செய்யும் இந்த காலகட்டத்திலேயே, சரியான மியூச்சுவல் ஃபண்டுகளில் SIP (Systematic Investment Plan) முறையில் முதலீடு செய்து, குறைந்தபட்சம் 1 கோடி ரூபாய் நிதியை (Corpus) உருவாக்க வேண்டும். பின்னர் அந்த 1 கோடியை, பணவீக்கத்தைத் தாண்டி வளரக்கூடிய பாதுகாப்பான ஃபண்டுகளில் வைத்து, அதிலிருந்து SWP (Systematic Withdrawal Plan) முறையில் ஒவ்வொரு மாதமும் உங்களுக்குத் தேவையான 30,000 ரூபாயை மட்டும் பென்ஷனாக எடுக்க வேண்டும்.
இந்த முறையைப் பின்பற்றினால், நீங்கள் மாதம் 30,000 ரூபாய் எடுத்துக்கொண்டே இருந்தாலும், உங்கள் 1 கோடி ரூபாய் அசல் கரையாமல், காம்பவுண்டிங் (Compounding) மூலம் பல மடங்கு வளர்ந்து கொண்டே இருக்கும்!

இந்த மேஜிக்கை நீங்கள் எப்படிச் செய்வது?
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் அடிப்படைகள், முதலீட்டாளர்கள் செய்யும் தவறுகள் மற்றும் அதைச் சரி செய்யும் விதம், SIP மற்றும் SWP ஆகியவற்றைச் சரியாகப் பயன்படுத்தும் முறை ஆகியவற்றை உங்களுக்கு நேரடியாகக் கற்றுத்தர வருகிறது லாபம் நடத்தும் இந்தச் சிறப்புப் பயிலரங்கம்!
சென்னையைச் சேர்ந்தவர்களுக்கான பிரத்யேக நிதித் திட்டமிடல் ஒர்க் ஷாப்
தலைப்பு: ₹1 கோடி நிதி + ₹30,000 மாத வருமானம் பெறுவது எப்படி?
நாள்: மே 03, 2026, ஞாயிறு (Sunday)
நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை (IST)
சிறப்புப் பேச்சாளர்: CT மகிழரசு, SBI Mutual Funds
இந்த ஒர்க் ஷாப்பில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. ஆனால், 100 பேருக்கு மட்டுமே அனுமதி. நிகழ்ச்சி முழுவதும் தமிழிலேயே நடைபெறும். உங்கள் நிம்மதியான ஓய்வுக்காலத்தை உறுதி செய்ய, இன்றே பதிவு செய்யுங்கள்!