’10 வருசமா தீவிரமா ரசிகர்களை சேர்த்துக்கிட்டு இருக்கோம்!’ – என்ன சொல்கிறது தனுஷ் ரசிகர் மன்றம்? |“We’ve Been Actively Building Our Fan Base for 10 Years!” – What Does Dhanush’s Fans Club Say?

Spread the love

அதனால் மாவட்டத்தை இரண்டாக பிரிக்கும் வகையில் ஐந்து தொகுதிகளை பிரித்து ‘கோவை தெற்கு’ எனப் பெயரிட்டு சதீஷ் என்பவரிடம் கொடுத்துவிட்டோம்.

இதை எங்களின் நற்பணி மன்ற லெட்டர் பேடில் ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக அறிவிப்பாக வெளியிட்டோம். அவ்வளவுதான், மற்றபடி இதில் எந்த அரசியல் நகர்வும் இல்லை.

இப்போது வரை எங்களிடம் 54 மாவட்டத் தலைவர்கள் இருக்கிறார்கள். மாவட்டங்களை தொகுதியாகவெல்லாம் பிரிக்கவில்லை. எங்களின் நிர்வாக வசதிக்கு எப்படி தேவைப்படுகிறதோ அப்படித்தான் பிரித்திருக்கிறோம்.

கடந்த 10 ஆண்டுகளாகவே மன்றத்தில் ரசிகர்களை சேர்க்கும் பணி ஆக்டிவாக நடந்து வருகிறது. எங்களை நம்பி வரும் ரசிகர்களை நாங்கள்தானே முறைப்படுத்த வேண்டும். அதற்காக மட்டுமே இதையெல்லாம் செய்கிறோம். எதனால் வெளியே இது வேறு மாதிரியாக பேசப்படுகிறது என தெரியவில்லை. இப்போதைக்கு எந்த அரசியலும் இல்லை. எங்களின் பணிகள் அப்படியே தொடரும்’ என்கின்றனர்!

காலம் கனியட்டும் என காத்திருக்கிறார்கள் போல!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *