1,008 அம்மன் பெயர்களை பிழையின்றிப் பாடிய சித்ராவின் திறமையை ஸ்ரீகாந்த் தேவா பாராட்டினார். விருது விழாவின் நெகிழ்ச்சியான தருணங்கள்!|’She Sang 1,008 Goddess Names Flawlessly’: Srikanth Deva Praises Chithra

Spread the love

பாடகி சித்ராவிற்கு “கலைநாயகி’ விருதை வழங்கினார்கள் கங்கை அமரன், ஸ்ரீகாந்த் தேவா, பாடகர் ஸ்ரீனிவாஸ், இயக்குநர் விக்ரமன் ஆகியோர்.

இசையமைப்பாளர் கங்கை அமரன் பேசும்போது, “ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து இசையைக் கற்றுக்கொண்டு, பாடப் பாட அதைத் தொழிலாக மாற்றி, இந்த அளவுக்குச் சாதித்திருக்கிறார் சித்ரா.

இதில் எனக்குக் கூடுதல் சந்தோஷம் என்னவென்றால், அவர் தமிழில் பாடிய முதல் பாடலுக்கே என்னுடன் சேர்ந்துதான் பணியாற்றினார். இளையராஜா அண்ணனுக்கு முன்பு ஒரு கீர்த்தனையைப் பாடிக் காட்டினார்.

சித்ரா விருது

சித்ரா விருது

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அத்தனை மொழிகளிலும் பாடக்கூடியவர் சித்ரா. தனியாக கிளாசிக் கச்சேரி நடத்தக்கூடியவர். அவருக்கு நாங்கள் விருது கொடுத்ததில் எனக்கு மகிழ்ச்சி’’ என்றார்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, “சித்ரா அம்மாவுக்கு விருது கொடுப்பதில் எனக்கு மகிழ்ச்சி. அப்பா மேலிருந்து வாழ்த்திக்கொண்டேயிருப்பார். ஓர் அம்மன் பாடலில் 108 அம்மன் பெயர்களை எந்தப் பிழையும் இல்லாமல் உச்சரித்து, சித்ரா அம்மா பாடியிருப்பார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *