எனக்கு விழுந்த அடிகளை வெளியே சொல்ல முடியாது.” என நகைச்சுவையாக தொடர்ந்தவர், “நீண்ட நாட்களுக்குப் பிறகு அண்ணனுக்கு ஒரு தீபாவளி ரிலீஸ் படம் அமைகிறது. எப்போதும் தீபாவளி வெளியீடு என்பது ஸ்பெஷல்தான்.
நான் உதவி இயக்குநராக வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்த காலத்தில் ‘காக்க காக்க’ ரிலீஸானது. கமலா தியேட்டரில் படம் பார்க்கச் சென்றேன். அதற்கு முன் வரை ‘எங்கள் அண்ணன் படத்திற்கு எப்போது கூட்டம் வரும், எப்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்வார்கள்’ என்று ஏங்கியிருக்கிறேன்.

ஆனால் ‘காக்க காக்க’ படத்தின் முதல் காட்சியில் ‘மாயா’ என்று கத்திவிட்டு அவர் விழும்போதும், ‘உயிரின் உயிரே’ பாடல் தொடங்கும்போதும் தியேட்டரே பிளாஸ்ட் ஆனது. அண்ணனை ஒரு பீஸ்ட் மோடில் பார்த்த திரைப்படம் அது.
அதன்பின் ‘பிதாமகன்’, ‘ஆயுத எழுத்து’ என ஒவ்வொரு படத்திலும் முற்றிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அண்ணனுக்கு அப்படிப்பட்ட ஒரு சிறப்பான கட்டம் அமைந்திருக்கிறது. ‘கருப்பு’ படத்தில் அவரது மாஸ் லுக், அடுத்து ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ படத்தில் கிளாஸியான நடிப்பு என அசத்தியிருந்தார்.
இப்போது இயக்குநர் ஜித்து மாதவனின் ‘சீன்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ‘ஆவேசம்’ படத்திற்குப் பிறகு ஜித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். சூர்யா அண்ணனை ஒரு டார்க் ஹியூமர் திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் ஜித்து உருவாக்கியிருப்பது எனக்குப் பெரும் ஆச்சரியத்தைக் அளிக்கிறது.” எனப் பேசியிருக்கிறார்.