இந்நிலையில், TN Fact Check Unit யை Information Integrity Desk என பெயர் மாற்றி அந்த அமைப்பின் தலைவராக ‘குரு’ என்பவரை தவெக அரசு நியமித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த குரு என்பவர் யார் என தவெக கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். ‘2013-14 வாக்கில் அதாவது தலைவா, கத்தி போன்ற படங்கள் வெளியான சமயத்தில்தான் இணையத்தின் வளர்ச்சியை அறிந்து தலைவரே அத்தனை சமூகவலைதளங்களிலும் தனக்கான கணக்கை தொடங்கி ஆக்டிவாகினார்.

இதற்கு பின்னணியில் இருந்தது இப்போது முதல்வருடன் இருக்கும் ஜெகதீஸ்தான். அவர்தான் ஐ.டி.விங்கின் முக்கியத்துவத்தை அப்போதே தலைவரிடம் எடுத்துக் கூறி, இணையதளத்தில் தலைவருக்காக இயங்கும் பல ஐ.டிக்களை உருவாக்கினார். அந்த ஐ.டிக்களின் பின்னால் இருந்த முகங்களில் முக்கியமானவர் குரு. ‘ஆன்லைன் தளபதி பேன்ஸ் க்ளப் (OTFC)’ என ஒன்றை தொடங்கி இணையத்தில் இயங்கிக் கொண்டிருந்த ரசிகர்கள் பலரையும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைத்தார்.