15 வருட போராட்டம் & வெற்றி: ரிஷிகாந்த் நெகிழ்ச்சி! | Rishikanth Expresses Gratitude After 15-Year Struggle

Spread the love

நீண்ட கால முயற்சிக்குப் பிறகு நடிகர் ரிஷிகாந்துக்குத் தற்போது வெற்றி நாற்காலி கிடைத்திருக்கிறது. அவர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த “மொத ராத்திரி’ மற்றும் ‘டோரதி’ படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

‘மொத ராத்திரி’ படத்தின் ஓடிடி ரிலீஸுக்குப் பிறகு சமூக வலைதளப் பக்கங்களில் இவரைப் பற்றி அதிகமாகப் பேசினர். தற்போது தன்னுடைய நடிப்புக்குக் கொடுத்த பாராட்டுகளுக்கும், தன்னுடைய படங்களுக்குத் தந்த வரவேற்புகளுக்கும் நன்றி தெரிவித்துப் பதிவிட்டிருக்கிறார் ரிஷிகாந்த்.

அந்தப் பதிவில் அவர், “என்னுடைய 15 வருட பயணம் அர்த்தமுள்ளதாக இருந்தது என்று என்னை உணர வைத்த ஒவ்வொரு நல்ல உள்ளத்திற்கும், என்னுடன் இத்தனை காலமும் நின்ற ஒவ்வொருவருக்கும், என் இதயத்தின் ஆழத்திலிருந்து மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பல வருடக் காத்திருப்புகள், எண்ணற்ற போராட்டங்கள், ஏமாற்றங்கள், வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடங்கள், “இன்னும் எவ்வளவு காலம்?” “இந்தப் பயணம் என்னை எங்கு அழைத்துச் செல்லும்?” என்று நான் என்னையே கேள்வி கேட்ட தருணங்கள் உண்டு.

ஆனால் இன்று, நீங்கள் என் மீது பொழிந்துகொண்டிருக்கும் அன்பையும், பாசத்தையும், ஆதரவையும் வார்த்தைகளால் முழுமையாகச் சொல்லுவது என்பது எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *