இதுகுறித்து நகைச்சுவையாகப் பேசிய மிசெல் ஹட்சன், ஒருவேளை அதனால்தான் அவர்கள் இந்தப் புத்தகத்தை எங்களிடம் திருப்பிக் கொடுக்காமல் போயிருப்பார்கள்! என்று சிரித்தபடி கூறினார்.
மேலும், இவ்வளவு பழைமையான புத்தகம் எங்களிடம் திரும்பி வந்தது இதுவே முதன் முறை. சமூக வலைதளங்களில் நான் பின்தொடரும் பிற நூலகங்களில் 30 அல்லது 40 ஆண்டுகள் தாமதமாக புத்தகங்கள் திரும்பிய சம்பவங்கள் நடந்திருக்கும். ஆனால் 150 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிய புத்தகம் இதுதான் முதல் முறை என்றார். இந்தப் புத்தகத்தை யார் கடனாக எடுத்துச் சென்றார்கள் என்பது தெரியவில்லை. காரணம், 1870-களில் எந்த நபர் இந்த புத்தகத்தை எப்போது எடுத்தார் என்பதை பதிவு செய்திருந்த நூலகத்தின் கடன் பதிவேடு (Borrowing Journal) தற்போது காணாமல் போய்விட்டது. மேலும் இந்தப் புத்தகத்தை கடைசியாக யார் எடுத்தார்கள் என்பதைச் சொல்லும் எந்த ஆதாரமும் புத்தகத்தில் இல்லை. என்று ஹட்சன் தெரிவித்தார்.
நூற்றாண்டுகளாக புகைப்போக்கி அருகே இருந்ததால், புத்தகம் நீரால் சேதமடைந்துள்ளது. இந்தப் புத்தகம், கியாமா நூலகம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்த சுமார் 1,000 புத்தகங்களைக் கொண்ட அசல் சேகரிப்பில் இடம்பெற்ற 506-ஆவது புத்தகம் ஆகும். நூலகம் தொடங்கி சில ஆண்டுகளிலேயே இந்தப் புத்தகம் காணாமல் போயிருக்கலாம் என்றும்,
இப்போது இந்த அரிய புத்தகம், கியாமா நூலகத்தின் உள்ளூர் வரலாற்று சேகரிப்பில் நிரந்தரமாகக் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து மிசெல் ஹட்சன் கடைசியாக “இனி இந்தப் புத்தகத்தை யாருக்கும் கடனாகக் கொடுக்கப் போவதில்லை. மீண்டும் இது திரும்பி வர இன்னொரு 150 ஆண்டுகள் காத்திருக்க எங்களுக்கு விருப்பமில்லை!” என்று நகைச்சுவையாக கூறினார்.