’16 வயதினிலே’ டு ‘கடல் பூக்கள்’!- பாரதிராஜா படங்களுக்கு விகடன் அளித்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா?| Do you know what scores Vikatan gave to Bharathiraja’s films

Spread the love

* அண்ணன்-தங்கை பாசத்தை தமிழர்களின் வாழ்வியலோடும், கிராமத்து மண் வாசனையோடும் உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடிய உன்னதமான படைப்பு ‘கிழக்கு சீமையிலே’. இந்தப் படத்திற்கு விகடன் அளித்த மதிப்பெண் 50.

* சமூகத்தில் நிலவும் சாதியக் கட்டமைப்புகளையும், மதச் சடங்குகளையும், போலித்தனங்களையும் துணிச்சலோடு தட்டிக்கேட்ட புரட்சிகரமான திரைப்படம் ‘வேதம் புதிது’. 1987-ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு விகடன் அளித்த மதிப்பெண் 50.

`கிழக்கு சீமையிலே’ படத்தில்

`கிழக்கு சீமையிலே’ படத்தில்

* பெண் சிசுக்கொலை என்னும் சமூக அவலத்தை உலகிற்குத் வெளிச்சமிட்டுக் காட்டிய படம் ‘கருத்தம்மா’. பாரதிராஜா இந்தப் படத்திற்காக தேசிய விருதையும் வாங்கி இருக்கிறார். ‘கருத்தம்மா‘ படத்திற்கு விகடன் அளித்த மதிப்பெண் 45.

* வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் ஏமாற்றங்களையும், திரையுலகில் நுழையத் துடிக்கும் மனிதர்களின் வலியையும் எதார்த்தமாகப் பேசிய புதுமையான முயற்சி ‘நிழல்கள்’. இந்தப் படத்திற்கு ஆனந்த விகடன் 45 மதிப்பெண்களை வழங்கி இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *