20% ரொம்ப அதிகம்.. நாங்க இதைவிட கம்மியா வாங்குவோம்! டிரம்புக்கு நக்கலாக பதிலடி கொடுத்த ஈரான்! | Iran Mocks Trump’s 20% Fee for Hormuz, Says ‘We Will Be Fair’ as Guardian of the Strait

Spread the love

International

oi-Halley Karthik

தெஹ்ரான்: உலக கச்சா எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் பயணிக்க 20% கட்டணம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், இந்த ரேட் ரொம்பவும் ஜாஸ்தி என்றும், இதை விட குறைந்த கட்டணத்தையே நாங்கள் வாங்குவோம் என்றும் ஈரான் நக்கலாக பதிலடி கொடுத்திருக்கிறது.

ஈரான்-அமெரிக்கா மோதல் மீண்டும் தொடங்கியிருப்பதால், ஹார்முஸ் மூடப்பட்டிருக்கிறது. இந்த வழியாகத்தான் அரபு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் உலகத்திற்கு சப்ளை ஆகிறது.

Iran

எனவே இந்த பாதையை உடனடியாக திறக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்த தொடங்கியிருக்கின்றனர். இதையடுத்து சீனுக்குள் வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், “ஹார்முஸ் ஓபனில்தான் இருக்கும். ஈரான் நாட்டு கப்பலை தவிர.. மற்ற கப்பல்கள் வழக்கம் போல பயணிக்கலாம். ஆனால், இந்த பாதுகாப்பு பணிக்காக நாங்கள் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டிருக்கிறோம். 20% பீஸ் கட்டிட்டு.. கப்பலை ஓட்டிட்டு போங்க” என்று கூறியிருந்தார்.

20% கட்டணம் என்பது ரொம்பவும் அதிகம். வழக்கமாக சரக்குகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல கப்பல் நிறுவனங்கள் இதை விட குறைந்த அமொவுண்ட்டைதான் கட்டணமாக வாங்குகின்றன. அப்படி இருக்கையில், 20% கட்டணம் கட்டுபடி ஆகாது என்று கப்பல் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியிருந்தன.

இப்படி இருக்கையில், ஈரான் இந்த விஷயத்தில் டிரம்புக்கு நக்கலாக பதிலடி கொடுத்திருக்கிறது. அதாவது, “அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லறது எல்லாம் ஓகேதான். ஹார்முஸில் போகும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கட்டணம் கட்டிதான் ஆகனும். ஆனா.. நிஜமான பாதுகாவலன் நாங்கதான். இனியும் நாங்கள்தான் இந்த பகுதிக்கு இன்சார்ஜ். இது எங்க ஏரியா.. அதனால நாங்க நியாயமான கட்டணத்தைதான் வசூலிப்போம்” என்று ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *