2000-க்கு மேல் யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கு கட்டணத்தால் யாருக்கு பாதிப்பு… நிஜத்தில் நடப்பது என்ன | Who is affected by the charges on UPI transactions exceeding ₹2,000? What is actually happening?

Spread the love

Business

oi-Velmurugan P

சென்னை: மத்திய அரசு ரூ.2000-க்கு மேலான யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கிறது. இந்த கட்டணம் வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குத்தானே தவிர, நுகர்வோருக்கு அல்ல என்று கூறப்படுகிறது. ஆனால் கீழே ஃப்ளிப்கார்ட் பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட் உள்ளது. நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், ஒவ்வொரு ஆர்டருக்கும் அது ‘பேமெண்ட் ஹேண்ட்லிங் ஃபீ’ வசூலிக்கிறது. இப்போது யுபிஐI-க்கும் இதுதான் நடக்கப்போகிறது.’கட்டணங்கள் வணிகரால் ற்றுக்கொள்ளப்படும்’ என்பது இப்படித்தான் செயல்படுகிறது; வணிகர் அந்த கட்டணத்தை அசல் விலையோடு சேர்த்து நுகர்வோர் மீதே எளிதாகச் சுமத்தி விடுகிறார்.” என்று நெட்டிசன் ஒருவர் தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளார்.

அந்த ஸ்கிரீன்ஷாட்டில் ஃப்ளிப்கார் நிறுவனம் விதித்துள்ள இரண்டு வகையான கூடுதல் கட்டணங்கள் மற்றும் அதற்கான நிபந்தனைகள் விவரித்துள்ளது.

Who is affected by the charges on UPI transactions exceeding 2 000 What is actually happening

1. ஆஃபர் ஹேண்ட்லிங் ஃபீ : ₹199

கார்டு ஆஃபர்களைப் பாதுகாப்பாக நிர்வகிக்கவும், செயலாக்கவும் ஃப்ளிப்கார்ட்டுக்கு ஏற்படும் செலவை ஈடுகட்ட இந்த ₹199 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
திருப்பித் தரப்படுமா என்றால் வாய்ப்பே இல்லை. இக்கட்டணம் திரும்பப் பெற முடியாதது . ஆனால் Minutes மற்றும் Grocery ஆர்டர்களுக்கு இதில் விதிவிலக்கு இருக்கிறது. எனினும் ஆர்டர் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது திருப்பி அனுப்பப்பட்டாலோ (Cancelled/Returned), இந்த ₹199 கட்டணம் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும் தொகையிலிருந்து கழிக்கப்படும்.

2. பேமெண்ட் ஹேண்ட்லிங் ஃபீ : ₹247

நீங்கள் தேர்வு செய்த குறிப்பிட்ட கட்டண முறையைக் கையாள்வதற்கான செலவை ஈடுகட்ட இந்த ரூ.247 வசூலிக்கப்படுகிறது. கட்டணத்தைத் தவிர்க்க வேண்டுமென்றால், வேறு ஏதேனும் கட்டண முறையைத் தேர்வு செய்ய வேண்டும்.திருப்பித் தரப்படுமா என்றால், இக்கட்டணம் திரும்பப் பெறக்கூடியது .
ஆர்டரை ரத்து செய்தால் அல்லது திருப்பி அனுப்பினால், இந்த ரூ.247 கட்டணத் தொகையும் உங்கள் ரீஃபண்டிலிருந்து கழிக்கப்படும்.இரு கட்டணங்களுமே இன்வாய்ஸில் பொருளின் தள்ளுபடிக்குள்ளேயே முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பது அந்த ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள தகவல்கள் ஆகும்.

இந்த நெட்டிசன் கூறியதற்கு பதில் அளித்த பிற நெட்டிசன்கள், மத்திய அரசு நிதி தொடர்பான சேவைகள் தொடர்பாக சொல்வதற்கும் வணிக நடைமுறைக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது. வியாபாரிகள் தங்களுக்கு ஏற்படும் செலவை தங்களின் லாபத்தில் இருந்து கொடுக்க வாய்ப்பே இல்லை.. ஏதேனும் ஒரு வழியில் நுகர்வோர் தலையில்தான் அந்த கட்டணத்தை கட்டுவார்கள் என்பதற்கு நீங்கள் பகிர்ந்த ப்ளிப்கார்ட் ஸ்கிரீன்ஷாட் ஒரு சிறந்த உதாரணம் என்று கூறியுள்ளார்கள்.

அதேநேரம் நெட்டிசன்கள் மேலும் கூறுகையில், வழக்கமான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு (உதாரணமாக, உங்கள் பேங்க் அக்கவுண்டில் இருந்து வியாபாரிகளின் வங்கிக் கணக்கிற்கு ஜிபே, போன்பே , பேடிஎம் மூலம் அனுப்புவது) எந்தக் கட்டணமும் கிடையாது. இது உங்களுக்கு முற்றிலும் இலவசம், வியாபாரிகளுக்கும் முற்றிலும் இலவசம்.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டப்படி, பேடிஎம் வாலட், அமேசான் வாலட் போன்ற பிரிப்பெய்டு பேமெண்ட் இன்ஸ்டுமெண்ட்ஸ் (PPI) மூலமாகவோ அல்லது ரூபே கிரெடிட் கார்டு (கிரெடிட் கார்டுகள்) மூலமாகவோ வியாபாரிகளுக்கு ரூ.2,000-க்கு மேல் பரிவர்த்தனை செய்தால், அதற்கு வணிகர் 1.1% வரை ‘இண்டர்சேன்ச்’ கட்டணம் செலுத்த வேண்டும்.

மத்திய அரசை பொறுத்தவரை நாங்கள் வாடிக்கையாளரிடம் நேரடியாகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று வியாபாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம் என்கிறது. ஆனால் நடைமுறையில் எந்த வணிகர்களும், அல்லது வணிக நிறுவனங்களும் அரசின் இந்தக் கட்டணத்தைச் சகித்து ஏற்றுக்கொள்வது இல்லை.. வாடிக்கையாளர் தலையில் ஏற்றிவிடுகின்றன,

ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் ‘Payment Handling Fee’, ‘Convenience Fee’, அல்லது ‘Offer Handling Fee’ என்ற பெயரில் நேரடியாகக் கட்டணத்தைச் சேர்த்து விடுவது வழக்கம். சிறிய கடைகள் மற்றும் வணிகர்கள், பொருளின் விற்பனை விலையிலேயே இந்தக் கட்டணத்தைச் சேர்த்து மறைமுகமாக நம்மிடமே வசூலித்து விடுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

இதனால் யாருக்குப் பாதிப்பு என்று பார்த்தால் மக்களுக்கு தான் பாதிப்பு. முன்பு கார்டு பரிவர்த்தனை (Credit Card MDR) விஷயத்தில் என்ன நடந்ததோ, அதேதான் வாலெட்/கிரெடிட் கார்டு சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகளிலும் நடக்கிறது. மத்திய அரசு சட்டப்பூர்வமாக வாடிக்கையாளரிடம் வசூலிக்கத் தடை விதித்திருந்தாலும், வணிகர்கள் சேவைக்கட்டணம் என்ற பெயரில் அதை மறைமுகமாக நுகர்வோர் மீதே சுமத்துவார்கள் என்பதும் கசப்பான உண்மை என்று நெட்டிசன்கள் பதில் அளித்துள்ளார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *