2026 FIDE: மகுடம் சூடிய வைஷாலி: வெற்றியைத் தொடர்ந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்! | Vaishali wins FIDE Candidates to challenge Ju Wenjun for Women’s World Championship

Spread the love

இந்திய செஸ் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை கிராண்ட் மாஸ்டர் வைஷாலி ரமேஷ்பாபு எழுதியுள்ளார். 

சைப்ரஸில் நடைபெற்ற 2026 பிடே (FIDE) மகளிர் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், உலக செஸ் மகுடத்திற்கான போட்டியில் தற்போதைய சாம்பியன் ஜூ வென்ஜூனை நேரடியாக எதிர்க்கும் தகுதியை அவர் பெற்றுள்ளார்.

 கொனேரு ஹம்பிக்கு பிறகு இந்தச் சாதனையைப் படைக்கும் இரண்டாவது இந்தியப் பெண்மணி வைஷாலி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் இறுதிச் சுற்று மிகுந்த போர்க்களமாகவே அமைந்தது.

கசகஸ்தானின் பிபிசாரா அசாபயேவா தனது ஆட்டத்தை சமன் செய்ததால், வைஷாலிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமானது.

அதைப் பயன்படுத்திக்கொண்ட வைஷாலி, ரஷ்யாவின் அனுபவம் வாய்ந்த வீராங்கனை கேடரினா லாக்னோவை எதிர்கொண்டார். 

“சிசிலியன் டிஃபென்ஸ்’ பாணியில் காய்களை நகர்த்திய வைஷாலி, ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஒரு சிப்பாயைக் (Pawn) கைப்பற்றி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியதுடன், 96 சதவிகித துல்லியத்துடன் லாக்னோவை வீழ்த்தி 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *