`21 ஆண்டில் 25 முறை இடமாறுதல்’ – IAS அதிகாரியின் நடடிக்கையால் கலக்கத்தில் பால்பண்ணைகள், உணவகங்கள் | 25 transfers in 21 years: Dairy farms and restaurants apprehensive over IAS officer’s actions

Spread the love

இது குறித்து துகாராம் முண்டே அளித்த பேட்டியில், “‘பால் என்பது வெறும் உணவுப் பொருள் மட்டுமல்ல, அது கோடிக்கணக்கான குழந்தைகள், தாய்மார்கள், நோயாளிகள் மற்றும் முதியவர்களின் முக்கிய ஊட்டச்சத்துக்கான அடிப்படை அடித்தளம் ஆகும். பாலில் கலப்படம் செய்வது என்பது பொதுமக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடுவதற்குச் சமம். இத்தகைய சட்டவிரோதச் செயல்கள் மகாராஷ்டிராவில் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது. தீவிர சோதனையைத் தொடர்ந்து சந்தைக்கு வரும் பால் மற்றும் பன்னீரின் விநியோக அளவு கணிசமாகக் குறைந்துள்ளது.

சந்தையில் ரசாயனங்கள் மற்றும் யூரியா கொண்டு தயாரிக்கப்பட்டு வந்த செயற்கை பால் மற்றும் போலி பன்னீர் விநியோகம் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது எங்கள் நடவடிக்கை தொடரும். மக்களும் விதிமுறைகளைப் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் சுகாதாரத் தரங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்” என்று முண்டே கூறினார்.”

எப்டிஏ அதிகாரிகளின் சோதனையில் மாட்டிவிடக் கூடாது என்ற பயத்தில், கலப்படக் கும்பல்கள் பாலை சாக்கடையில் கொட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *