தமிழ்நாட்டிற்குள் எந்த வழியிலும் போதைப்பொருள் நுழைவதை அனுமதிக்க மாட்டோம். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போன்று பேசுபவர்கள் நாங்கள் கிடையாது. டாஸ்மாக் துறையில் தற்போது மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளோம். தனிநபர்கள் மற்றும் கட்சிக்காரர்களிடம் சென்று கொண்டிருந்த ரூ.1,000 கோடி ஊழல் பணம் தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான முறையான அரசாணை ஜூன் 5-ஆம் தேதி கொண்டுவரப்பட்டுள்ளது. டாஸ்மாக் மட்டுமல்லாது எந்தத் துறையிலும் இனி ஊழல் இருக்காது. டாஸ்மாக்கில் மாதம் ரூ.100 கோடி வீதம் தனிநபர்களின் கணக்கிற்குச் சென்ற மாபெரும் ஊழல் நடந்துள்ளது. அந்தவகையில் ரூ.3,600 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளத. மதுபான விற்பனையில் மட்டுமின்றி, கொள்முதலிலும் ஊழல் நடைபெற்றுள்ளது.” என்றார்.
Minister Vignesh alleges that there is corruption worth Rs 3,600 crore per year in tasmac – ‘டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஊழல் நடந்துள்ளது’ – அமைச்சர் விக்னேஷ் பகீர் குற்றச்சாட்டு