22 எபிசோடுகள், ஒரேயொரு போட்டியாளர், ‘பிக்பாஸ் தி காமன் மேன்’ எதற்காக தெரியுமா? | Bigg Boss The Common Man: ’22 episodes, just one contestant’ – do you know why?

Spread the love

விஜய் டிவியில் 2017ம் ஆண்டு ஒளிபரப்பாகத் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இது பத்தாவது ஆண்டு. எனவே இந்த வருடம் ஸ்பெஷலாக எதாவது செய்யலாமென்றே “பிக்பாஸ் தி காமன் மேன்’ அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது என்கிறார்கள்.

ஆம், நேற்று முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கும் ‘பிக்பாஸ் தி காமன் மேன்’ பிக்பாஸ் சீசன் 10-க்கு முன்னோட்டம் எனச் சொல்லலாம்.

நிகழ்ச்சி தொடர்புடைய சிலரிடம் பேசினோம்.

ஓவியா - Bigg Boss, The Common Man

ஓவியா – Bigg Boss, The Common Man

அதாவது கடந்து பத்தாண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்து ஆதரவு தந்த ரசிகர்களுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒரு வாய்ப்பு தருவதற்காக இந்த நிகழ்ச்சியாம்.

பிக்பாஸைத் தொடர்ந்து ரசித்து வந்த சாமானிய மக்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் தனித்துவம் மிக்க, மக்களை என்டர்டெய்ன் செய்யும் திறமை கொண்டவர்கள் அடுத்தடுத்த நாட்களில் நிகழ்ச்சிக்குள் செல்லவிருக்கிறார்கள். இவர்களில் தேர்வாகிறவர்களும் சரி வாய்ப்பை இழந்தவர்களும் சரி காமன் மேன் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை பிக்பாஸ் வீட்டில் தங்க வேண்டியதில்லை.

மொத்தம் 22 எபிசோடுகள் ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி பல கட்டங்களாக நடந்து இறுதியில் ஆரி, ராஜு, ஓவியா உள்ளிட்ட நடுவர்கள் மற்றும் பொதுமக்களால் பெரிதும் கவரப்பட்ட ஒருவரே செப்டம்பர் 6ம் தேதி ஒளிபரப்பாகவிருக்கும் பிக்பாஸ் 10 வது நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொள்ள இருக்கிறாராம். இந்த ஒன்று என்கிற எண்ணிக்கை கடைசி நேரத்தில் இரண்டானாலும் ஆகலாமென்றும் கூறப்படுகிறது.

அதாவது பிக்பாஸ் தன் ரசிகர்களுக்கு அன்பைத் திருப்பித் தரும் நேரமாம் இது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *