22 லட்சம் டிரைவர்கள் பற்றாக்குறை: கட்கரி சொன்ன வேலைவாய்ப்பு வாய்ப்பு|8 Crore Jobs Possible? Gadkari’s Big Transport Sector Pitch

Spread the love

இந்தியாவின் வேலைவாய்ப்பின்மைப் பிரச்னை குறித்தும், 22 லட்சம் வேலைவாய்ப்புகள் குறித்தும் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளதாவது…

“நமது நாட்டில் கிட்டத்தட்ட 22 லட்சம் டிரைவர்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே, இதில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன என்பதே உண்மை நிலை.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு ஃபைலில் எடுத்த சிறிய முடிவைச் சொல்கிறேன்.

இருசக்கர வாகனம் அல்லது கார் வைத்திருக்கும் யாரும் தங்களின் வாகனத்தை வாடகை டாக்ஸியாக இயக்கலாம் என்று அப்போது கையெழுத்திட்டேன்.

Rapido, Ola பைக் டாக்ஸி

Rapido, Ola பைக் டாக்ஸி

அப்படித் தொடங்கப்பட்ட திட்டத்தின் மூலம், தற்போது கிடைத்த புள்ளிவிவரங்களின்படி, மொத்தம் 4 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. ஏனெனில், இந்தியச் சூழலில் வேலையின்மை என்பது ஒரு மிகப்பெரிய பிரச்னை.

பெங்களூரைச் சேர்ந்த ஐ.ஐ.டி இன்ஜினீயர்கள் சிலர் இணைந்து ‘ராபிடோ’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். அவர்களின் ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன்.

அந்த நிறுவனம் மட்டுமே சுமார் 2 கோடியே 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறார்கள்.

இப்போது அந்த இளைஞர்களுக்குத் தொழில் வாய்ப்பு கிடைப்பதோடு, தங்களின் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை டாக்ஸியாகவும் பயன்படுத்தி வருகிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *