
தமிழகத்தில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கும்மிடிப்பூண்டி பகுதியில் 3 வயது குழந்தை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல தொடர் குற்றங்கள் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளன.
பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக தொடங்கப்பட்ட “சிங்கப்படை” போன்ற சிறப்புப் பிரிவுகள் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கின்றன. பாலியல் குற்றங்களைக் கட்டுப்படுத்த மாநில அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் மாதர் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன.நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே?. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.