“29 வருடங்களாக என்னை இந்த மேடையில் நிற்க வைத்து அழகு பார்க்கிறீர்கள்!” – நெகிழும் சூர்யா |suriya-speech-at-scene-movie-audio-launch-thanks-dhanush

Spread the love

சூர்யாவின் “சீன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது. மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

Suriya - Scene Title Teaser

Suriya – Scene Title Teaser

இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

சூர்யா பேசுகையில், “என்னுடைய முதல் படமான ‘நேருக்கு நேர்’ திரைப்படத்திற்குத் தேவா சார்தான் இசையமைத்தார். இந்த மேடையின் வாயிலாக அவருக்கு என்னுடைய பிரார்த்தனைகளையும், அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். “அவள் வருவாளா…” என்று அன்று அவர் போட்ட பாட்டுதான் இன்றளவும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நான் இந்த அளவுக்கு உயர்ந்து வந்திருக்கிறேன் என்றால், அதற்குத் தேவா சார் எனக்குக் கொடுத்த தொடக்கம்தான் காரணம். உங்களை எப்போதும் என் நினைவில் வைத்திருப்பேன் சார்.

கடந்த 29 வருடங்களாக அன்பு சிறிதும் குறையாமல் என்னை இந்த மேடையில் நிற்க வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக அந்த அன்பை இன்றளவும் பின்பற்றி வருகிறீர்கள். 5,000 பேரை வைத்து ஒரு ரத்த தான முகாம் ஆரம்பித்தோம். “நீங்கள் ரத்தம் கொடுத்தால் உங்களுடன் புகைப்படம் எடுக்கிறேன்” என்று சொன்னேன்.

அப்படித் தொடங்கிய அந்த இயக்கம், இப்போது வருடத்திற்கு 5,000 பேர் ரத்த தானம் செய்யும் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு அந்த எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருப்பது நெகிழ்ச்சியளிக்கிறது.

நானும் ஜோதிகாவும் ‘ரோமஞ்சம்’ திரைப்படம் பார்த்தபோது விழுந்து விழுந்து சிரித்தோம். ஜித்து மாதவனின் ‘ஆவேசம்’ படமும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஜித்து ஒரு உலகத்தை உருவாக்கினார் என்றால், அது ஒரு படத்திலிருந்து மற்றொரு படத்திற்கு முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *