“15 வருடங்கள், ஆயிரம் கனவுகள், எண்ணற்ற போராட்டங்கள்!” – நெகிழும் சனந்த் |actor-sananth-emotional-thanks-note-for-dorothy-movie-success

Spread the love

திரையரங்கிலும், ஓடிடி வெளியீட்டிலும் கார்த்திக் சுப்புராஜின் “டோரதி’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

படத்தில் நடித்த நடிகர்கள் சனந்த், ரிஷிகாந்திற்கும் மக்கள் பாராட்டையும் அன்பையும் தந்திருக்கிறார்கள். ‘டோரதி’ படத்திற்கு கிடைத்திருக்கும் அளப்பரிய வரவேற்புக்கு நன்றி தெரிவித்துப் பதிவிட்டிருக்கிறார் சனந்த்.

அந்தப் பதிவில் சனந்த், “15 வருடங்கள். ஆயிரம் கனவுகள். எண்ணற்ற போராட்டங்கள். தொடக்கமாக, இந்தத் தருணம். என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. ஒரு நடிகனாக என்னை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.

சமீபத்தில் ஒரு பதிவில் படித்த ஒரு வரி, “பல தசாப்தங்கள் எதுவுமே நடக்காமல் கடந்து போகலாம். ஆனால், சில வாரங்களில் பல தசாப்தங்களுக்கான மாற்றங்கள் நிகழ்ந்துவிடும்” என்பது. நீங்கள் அனைவரும் என் மீது பொழிந்த அன்பும், பாராட்டுகளும் இந்த வரிகளுக்கு அப்படியே பொருந்துகின்றன.

நீங்கள் தந்த ஆசீர்வாதங்கள், இதயப்பூர்வமான அரவணைப்புகள், கண்களில் கசியும் கண்ணீர் மற்றும் என்னுடைய நடிப்பைப் பற்றிப் பேசும்போது என் பயணத்தின் ஒரு பகுதி உங்கள் பயணத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டதைப் போல நீங்கள் வெளிப்படுத்தும் அந்த உற்சாகம்தான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய விருது.

TIFF வரை பயணித்து, உங்கள் இதயங்களுக்குள் இடம்பிடித்து, என் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் நினைத்துக்கொண்டே இருக்கப்போகும் ஒரு உணர்வை இந்தத் திரைப்படம் எனக்குப் பரிசளித்திருக்கிறது. நான் ஏற்றுக்கொள்ளப்பட்டேன் என்ற அந்த உணர்வும், நீங்கள் அனுப்பிய ஒவ்வொரு குறுஞ்செய்தியும், கைப்பட எழுதிய கடிதமும், கட்டுரையும், எடிட்டும், தொலைபேசி அழைப்பும் என்னுள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு பகுதியைத் தொட்டுச் சென்றிருக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *