3 – 500 ரூபாயில் மர செடி வகைகள்; ஒடிசா வரை ஏற்றுமதி- நர்சரி தொழிலில் ஜொலிக்கும் கல்லுக்குடியிருப்பு | Kallukudiyiruppu: The Pudukottai Village Famous for Its Nursery Business

Spread the love

புதுக்கோட்டை மாவட்டத்தின் பெருமை – இந்தியா முழுவதும் பசுமையைப் பரப்பும் கல்லுக்குடியிருப்பு நர்சரி கிராமம்.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள கல்லுக்குடியிருப்பு கிராமம், நர்சரி தொழிலில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கிராம மக்கள் பெரும்பாலும் நர்சரி தொழிலையே தங்களது முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

இந்த கிராமத்தில் அலங்காரச் செடிகள், பூச்செடிகள், பழமரக் கன்றுகள், நிழல் தரும் மரக்கன்றுகள், மருத்துவ மூலிகைச் செடிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன.

கல்லுக்குடியிருப்பு நர்சரி கிராமம்

கல்லுக்குடியிருப்பு நர்சரி கிராமம்

மேலும் டிராகன் பழம், லிச்சி, அவகேடோ, ரம்புத்தான், ஸ்ட்ராபெரி, கொய்யா, மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் போன்ற பழ வகை செடிகளும், மாமரம், வாழைமரம், தென்னை மரம் போன்ற மரக்கன்றுகளும் விற்கின்றனர்.

ரூ.3 முதல் ரூ.500 வரை பல்வேறு விலையில் செடிகள் விற்பனை செய்யப்படுவதால், அனைத்து தரப்பு மக்களும் எளிதாக வாங்கிச் செல்லும் வகையில் உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *