3 dogs killed by poisoning; Youth comes to SP office with dead dog-விஷம் வைத்து கொல்லப்பட்ட 3 நாய்கள்; இறந்த நாயுடன் எஸ்.பி அலுவலகம் வந்த இளைஞர்

Spread the love

நெல்லை மாவட்டம், உகந்தான்பட்டியைச் சேர்ந்தவர் துரை. இவர் தனது வீட்டுக்காவலுக்காக 3 சிப்பிப்பாறை நாய்கள் உட்பட 5 நாய்களை வளர்த்து வந்தார். இதில் சிப்பிப்பாறை நாய்கள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் மதிப்புடைது எனக் கூறப்படுகிறது.

கடந்த 21-ம் தேதி துரையின் நாய், பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுடலைக்குமார் என்பவர் வளர்க்கும் நாயை கடித்துவிட்டது. இதுதொடர்பாக துரை மற்றும் சுடலைக்குமார் ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

எஸ்.பி அலுவலகம்

எஸ்.பி அலுவலகம்

இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி, காலையில் துரை தனது 3 சிப்பிப்பாறை நாய்களை தனது வீட்டின் பின்புறம் கட்டிவைத்துவிட்டு வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டார். மதியம் அவரது மனைவி அந்த நாய்களுக்கு உணவு வைத்துள்ளார். இரவில் வேலை முடிந்து வீடு திரும்பிய துரை, நாய்களுக்கு உணவு வைக்கச் சென்றபோது 3 சிப்பிப்பாறை நாய்களும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளன. இதனையடுத்து துரை, மயங்கிய  நாய்களை அருகில் உள்ள பெட் கிளினிக்கிற்க்கு தூக்கிச் சென்றுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *