4 ஆண்டுக்கு பின் கம்பேக்.. இந்திய அணிக்குள் வந்த ஸ்விங் கிங்! 36 வயதிலும் அசராத புவனேஷ்வர் குமார் | Bhuvneshwar Kumar: Bhuvneshwar Kumar come back to Indian T20 team after 4 years in the New Zealand Tour

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் அனுபவ வீரரான புவனேஷ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் புவனேஷ்வர் குமார் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில், 4 ஆண்டுகளுக்கு பின் மரண மாஸ் கம்பேக் கொடுத்து அசத்தி இருக்கிறார்.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் டி20 தொடர் அக்டோபர் 22ஆம் தேதி முதல் நவம்பர் 1ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. அக்டோபர் 22ல் முதல் டி20 போட்டியும், அக்டோபர் 24ல் 2வது டி20 போட்டியும், அக்டோபர் 27ல் 3வது டி20 போட்டியும், அக்டோபர் 30ல் 4வது டி20 போட்டியும், நவம்பர் 1ல் கடைசி டி20 போட்டியும் நடக்கவுள்ளது.

Bhuvneshwar Kumar

இந்த டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஒரேயொரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து மண்ணில் நடப்பதால் ஸ்பின்னரான ரவி பிஷ்னாய் நீக்கப்பட்டு, அந்த இடத்தில் வேகப்பந்துவீச்சாளரான புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். 2022 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு பின் புவனேஷ்வர் குமார் ஓரங்கட்டப்பட்டார்.

4 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாட புவனேஷ்வர் குமார் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் யுபி டி20 லீக் தொடங்கி ஐபிஎல், ரஞ்சி டிராபி, சையத் முஷ்டாக் அலி தொடர் என்று அத்தனை தொடர்களிலும் தன்னுடைய முத்திரையை பதித்து கொண்டே இருந்தார். அதிலும் 2025 மற்றும் 2026 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல புவனேஷ்வர் குமாரின் பங்கு மிக முக்கியமானது.

இந்த நிலையில் 36 வயதாகும் புவனேஷ்வர் குமார் இந்திய அணிக்குள் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்த அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், திலக் வர்மா ஆகியோர் தேர்வாகி இருக்கின்றனர்.

அதேபோல் ஆல்ரவுண்டர்களான அக்சர் படேல், சிவம் துபே, நமன் திர், நிதிஷ் ரெட்டி ஆகியோர் இருக்கின்றனர். வேகப்பந்துவீச்சாளர்களான பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார் ஆகியோரும், ஸ்பின்னர்களாக வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் தேர்வாகி இருக்கின்றனர். அர்ஷ்தீப் சிங் இருக்கும் போது புவனேஷ்வர் குமாருக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், அவர் ஒருநாள் அணியிலும் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *