இதனால் அமைச்சர்களை எச்சரிக்கும் தொனியில்தான் முதல்வர் கூட்டத்துக்கே வந்தார். மொத்தம் 40 நிமிடங்கள் கூட்டம் நடந்தது. பட்ஜெட் சார்ந்து முக்கியமான துறைகளின் எதிர்பார்ப்பு மற்றும் தேவை குறித்து விரிவாக பேசப்பட்டது. உத்தண்டி மேம்பால திட்டத்தின் பழைய டெண்டர் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், புதிய டெண்டர் விடுவதற்கான ஏற்பாடுகளையும் முதல்வர் செய்ய சொல்லியிருக்கிறார். இதுபோக நீர்வளத்துறையின் திட்டங்கள் சிலவற்றுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. சமீபமாக சில அமைச்சர்கள் மீது வந்த புகார்களை கண்டு முதல்வர் கொதித்து போயிருக்கிறார். அதனால்தான் ‘லஞ்சம், ஊழல் என எதாவது புகார் வந்தால் பொறுத்துக் கொள்ளமாட்டேன். தெரிந்தவர், தெரியாதவர் என யாராக இருந்தாலும் அமைச்சரவையிலிருந்து தூக்கி வீசி விடுவேன்’ என கறாராகவே கூறியிருக்கிறார்.

உத்தரவை மீறி எதாவது நடந்தால் விளைவுகளை எதிர்கொள்ள தயாராகிக் கொள்ளுங்கள் எனவும் எச்சரித்திருக்கிறார்” என்றனர்.