
ஜம்மு காஷ்மீர் மாநில வளையப்பந்து கழகம் மற்றும் இந்திய வளையப்பந்து கூட்டமைப்பு இணைந்து நடத்திய 43வது ஜூனியர் தேசிய வளையப்பந்து போட்டிகள் – 2026 ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் உள்ள கிரீன் பீல்ட் விளையாட்டு மைதானத்தில் 17/11/2026 (செவ்வாய்க்கிழமை) முதல் 21/11/2026 (சனிக்கிழமை) வரை தொடர்ச்சியாக 5 நாட்கள் நடைபெறது.
இப்போட்டிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 460 மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் 22 க்கு மேற்பட்ட அணிகளாக கலந்து கொண்டனர்.
இப்போட்டிகள் குழு போட்டியாகவும், தனிநபர் ஒற்றையர், தனிநபர் இரட்டையர் மற்றும் தனிநபர் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழ்நாடு மாணவர்கள் அணியின் சார்பாக திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, வளையம்பட்டி சேர்ந்த G.சஞ்சை பிரசாத், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த M.செல்வவிகாஷ், P. நந்தபாலன், M.ஹரி கிருஷ்ணன், V.கிஷோர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த S.சுந்தர வாசன் ஆகியோரும்
மாணவிகள் பிரிவில் நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தை சேர்ந்த R.ரித்திகா, திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, வளையம்பட்டி சேர்ந்த R.தேவதர்ஷினி B.மகாலட்சுமி, S.வின்சி, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த A.ஷானிஸ் இவாஞ்சலின், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த S.வாணிஸ்ரீ ஆகியோரும் கலந்து கொண்னர்.
நடந்து முடிந்த 43வது ஜூனியர் தேசிய அளவிலான வளையப்பந்து போட்டியில் தமிழக மாணவர்கள் அணி குழு போட்டியில் மகாராஷ்டிரா அணியை எதிர்த்து விளையாடி 3-1 என்ற புள்ளியின் அடிப்படையில் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றது.
அதேபோல் தமிழக மாணவிகள் அணி பாண்டிச்சேரி அணியை எதிர்த்து விளையாடி 3-1 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெள்ளிப்பதக்கத்தை வென்றது.
தனிநபர் போட்டிகளில் மாணவர்களுக்கான ஒற்றையர் போட்டியில் தமிழ்நாடு அணியைச் சேர்ந்த M.செல்வவிகாஷ் தங்கப்பதக்கத்தையும் மற்றும் தமிழக அணியைச் சேர்ந்த G.சஞ்சை பிரசாத் வெங்கலப்பதக்கத்தை வென்றார்கள்.
மேலும் தனிநபர் மாணவிகளுக்கான ஒற்றையர் பிரிவில் தமிழக அணியை சேர்ந்த R.ரித்திகா தங்கப்பதக்கம் வென்றார்.
தனிநபர் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற M.செல்வ விகாஷ் மற்றும் R.ரித்திகா ஆகியோர் 2026 ஆண்டு ஜூனியர் பிரிவில் சிறந்த விளையாட்டு வீரர்கள் என்று அறிவிக்கப்பட்டது.
மாணவர்களுக்கான தனிநபர் இரட்டையர் பிரிவில் தமிழக அணியைச் சேர்ந்த P.நந்தபாலன் மற்றும் M. ஹாரி கிருஷ்ணன் ஆகியோர் மகாராஷ்டிரா அணியை எதிர்த்து விளையாடி 2-1 என்ற புள்ளி அடிப்படையில் தங்கப்பதக்கம் வென்றனர்.
மாணவிகளுக்கான தனிநபர் இரட்டையர் போட்டியில் B. மகாலட்சுமி மற்றும் A.ஷானிஸ் இவாஞ்சலின் ஆகியோர் கேரளா அணியை எதிர்த்து விளையாடி 2-1 என்ற புள்ளியில் அடிப்படையில் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.
தனிநபர் கலப்பு இரட்டையர் பிரிவில் V.கிஷோர் மற்றும் S.வின்சி ஆகியோர் ஆந்திரா அணியை எதிர்த்து விளையாடி 2-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் தங்கப்பதக்கத்தை வெற்றனர்.
நடந்து முடிந்த 43வது ஜூனியருக்கான வளையப்பந்து போட்டியில் தமிழக வளையப்பந்து அணி 25 புள்ளிகளுக்கு 20 புள்ளிகளை பெற்று தொடர்ந்து 7 வருடங்களாக மேலாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டிய வழிநடத்திய தமிழக வளையப்பந்து கழகத்தினுடைய செயலாளர் திரு. D.சங்கர் அவர்கள் மற்றும் அணி பயிற்சியாளரான B.முரளி மற்றும் D.சாமுவேல் J.மலர்விழிஷீலா ஆகியோர் மற்றும் அணி மேலாளர்களான திரு. G.கீர்த்திவாசன் மற்றும் K.ஆனந்த கிருஷ்ணன் ஆகியோரும் அணி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
43 வது தேசிய அளவிலான ஜூனியர் வளையப்பந்து போட்டியில் பங்கு பெற்று பதக்கங்களை வென்று குவித்த தமிழக மாணவ மற்றும் மாணவிகள் அணியை சேர்ந்த அனைவருக்கும் தமிழ்நாடு வளையப்பந்து கழகத்தினுடைய சேர்மன் திரு. M.V.M வேல்முருகன், தலைவர் திரு. சௌபாக்யா V. வரதராஜன், செயலாளர் திரு. D. சங்கர், பொருளாளர் திரு. K. ஆனந்த கிருஷ்ணன் மற்றும் துணைத்தலைவர்கள், துணைச் செயலாளர்கள், நிர்வாக உறுப்பினர்களும் மற்றும் இந்திய வளையப்பந்து கூட்டமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்ட வளையப்பந்து கழகத்தினுடைய தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.