இந்த நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) இந்தியாவில் அதிகம் முதலீடு செய்து வருகிறார்கள்.
கடந்த ஐந்து நாள்களில் மட்டும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியாவில் 5 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள்.
இதைச் சுட்டிக்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த வருடம் முழுவதும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளைப் பெருமளவில் விற்றுத் தள்ளிக் கொண்டிருந்தார்கள்.
இதற்குக் காரணம் மூலதன ஆதாய வரிதான் (Capital Gains Tax) என்று சந்தை ‘நிபுணர்கள்’ எல்லாம் கூப்பாடு போட்டதோடு, வரிகளைக் குறைக்கச் சொல்லி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் அழுத்தம் கொடுத்தார்கள்.
FIIs were selling Indian equities heavily this whole year
Market ‘pundits’ screamed that it was due to capital gains taxes
Lobbied FM @nsitharaman to cut taxesThen….
US midterm election results gave majority to Democrats
Nvidia CEO was caught in multiple affairsAnd so…
Investors exiting AI stocks in the US
Highest ever FII buying of Indian equities
Our stock market risingWhile…
We had nothing to do with US midterms elections or Jensen Huang’s affairs !So much for ‘pundits’, their analyses & capital gains tax lobbying ♂️
We have to do what is right for us…
Make biz climate easy
Welcome foreign investment
Tax all gains fairly & use it to build schools, hospitals, roads & homes for our people— Praveen Chakravarty (@pravchak) November 12, 2026
ஆனால், அதன் பிறகு நிலைமையே மாறிவிட்டது. அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகளில் ஜனநாயகக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்தது; அதோடு என்விடியா சிஇஓ பல தனிப்பட்ட விவகாரங்களில் சிக்கினார்.
இதன் விளைவாக, அமெரிக்காவில் ஏ.ஐ. பங்குகளிலிருந்து முதலீட்டாளர்கள் வெளியேறத் தொடங்கி, இப்போது இந்தியப் பங்குகளை இதுவரை இல்லாத அளவுக்கு வாங்கி குவிக்கிறார்கள். நமது பங்குச்சந்தையும் ஏறுமுகத்தில் இருக்கிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால், அமெரிக்க இடைத்தேர்தலுக்கும் சரி, ஜென்சன் ஹுவாங்கின் தனிப்பட்ட விவகாரங்களுக்கும் சரி, நமக்கும் துளியும் சம்பந்தமில்லை!
இந்தச் சந்தை ‘நிபுணர்களின்’ லட்சணமும், அவர்களின் ஆய்வுகளும், வரிக்குறைப்புக்காக அவர்கள் செய்த லாபியும் இவ்வளவுதான்.
எனவே, நமக்கு எது சரியோ அதைத்தான் நாம் செய்ய வேண்டும். தொழில் தொடங்குவதற்கான சூழலை எளிமையாக்கி, வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்க வேண்டும்.
அதேசமயம், எல்லா லாபங்களுக்கும் நியாயமான வரி விதித்து, அந்தப் பணத்தைக் கொண்டு நமது மக்களுக்கு பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், சாலைகள் மற்றும் வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.