6 விநாடிகளில் அப்படியே சரிந்த மலை.. வெள்ளம், நிலச்சரிவால் நேபாளத்தில் பயங்கரம்.. பகீர் வீடியோ | Nepal Landslide Videos: Entire Mountains Collapse in Seconds Amid Floods, What really happened

Spread the love

India

oi-Vigneshkumar

காத்மாண்டு: நேபாளத்தில் வெள்ள பாதிப்புகள் தொடர்ந்து வரும் நிலையில், இயற்கை அங்கு எந்தளவுக்கு கொடூரமாக இருக்கிறது என்பதை காட்டும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. வெறும் ஆறே நொடிகளில் ஒட்டுமொத்த மலையும் சரிந்து விழும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பனிச்சரிவு சம்பவங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதில் இரண்டு வெவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதில் சுமார் 6 விநாடிகளில் மலைப்பகுதிகள் அப்படியே சரிந்து விழும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மலை சரிவதை பார்த்த மக்கள் அச்சத்தில் கதறி அழுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nepal Landslide

முதல் வீடியோ

முதல் வீடியோ மஸ்டாங் மாவட்டத்தின் லேட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்டது. திடீர் வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்ட போது மலையின் பெரிய பகுதி ஒன்று கீழே உள்ள காளிகண்டகி ஆற்றுக்குள் சரிந்து விழுவது தெரிகிறது. சுமார் 6 விநாடிகளில் மண் மற்றும் பாறைகள் வேகமாக ஆற்றில் சரிந்து விழுகின்றன. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சத்தில் அலறும் சத்தமும் பதிவாகியுள்ளது. சார் தம் புனித யாத்திரை சென்றவர்கள் இந்த வீடியோவை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலைப்பகுதி சரிந்து விழுந்ததால் காளிகண்டகி ஆற்றின் பாதையே சற்று நேரம் முடங்கியது.. பின்னர் நீர், குவிந்திருந்த இடிபாடுகளுக்கு நடுவே புதிய பாதையை உருவாக்கி மீண்டும் ஓட தொடங்கியது. இவை அனைத்துமே அந்த வீடியோவில் மிக தெளிவாக பதிவாகியுள்ளது.

இரண்டாவது வீடியோ

இரண்டாவது வீடியோவும் ஒரு மலை பகுதியில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் நிலம் அப்படியே பெயர்ந்து பள்ளத்தாக்கை நோக்கி சரிந்து செல்வது தெரிகிறது. மண்ணுடன் பல மரங்களும் பள்ளத்தாக்குக்குள் அடித்து செல்லப்படுகின்றன. கேமரா அந்த பகுதியை நோக்கி நகரும் போது, கிராம மக்கள் கதறி அழுவதை கேட்க முடிகிறது.

நேபாளத்தின் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இதுவரை குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் மாயமாகியுள்ளனர். கண்டகி மாகாணத்தில் தொடர்ந்து 3 நாட்கள் கனமழை பெய்ததைத் தொடர்ந்து சனிக்கிழமை காளிகண்டகி ஆற்றில் நீர்மட்டம் உயர தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை காலை அது பெரிய வெள்ளமாக மாறியது.

மோசமான பாதிப்பு

அங்கு பல மாவட்டங்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. பர்பத் மாவட்டத்திலும் உள்ள ஒரு கிராமத்தில் முழு குடியிருப்பு பகுதியையே வெள்ளம் அடித்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நிலச்சரிவுகள் காரணமாக சித்வான் நோக்கி செல்லும் முக்கிய சாலைகளும் தடைப்பட்டுள்ளன. இதனால் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையினர் ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்கிறார்கள்.

தொடரும் துயரம்

இது தவிர 7,126 மீட்டர் உயரம் கொண்ட இந்த மலையின் பேஸ் கேம்பில் ஏற்பட்ட பனிச்சரிவிலும் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காணாமல் போயுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அதேபோல நார் ஃபு பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு, 9 மலையேற்ற வீரர்கள் மற்றும் 13 பணியாளர்கள் தங்கியிருந்த கூடாரத்தை மூடியுள்ளது. அவர்கள் நிலை என்னவானது என தெரியவில்லை.

நேபாளத்தில் இயற்கை பேரழிவுகள் தொடர்ந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி ஏற்பட்ட இமயமலையில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 6,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *