80-வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி|Live Updates

Spread the love

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்.!

80-வது சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.

பிரதமர் மோடி, “இன்று ஒவ்வொரு இதயமும் “வந்தே மாதரம்’ எனும் தாளகதியில் துடிக்கிறது. இன்று ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி உள்ளது; ஒவ்வொரு மனதிலும் மூவர்ணக் கொடி உள்ளது.

இந்தச் சுதந்திர தினத்தன்று, மகாத்மா காந்தி மற்றும் அனைத்துச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் புரட்சியாளர்களுக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். சுதந்திரத்திற்குப் பிறகு, செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து ‘வந்தே மாதரம்’ முழக்கம் எதிரொலித்த தருணம் இதுவாகும்.

புதிய உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டு, தேசமானது உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் முன்னேறிச் செல்கிறது.

கடந்த சில நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு பலரைப் பாதித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ஒட்டுமொத்த நாடும் அவர்களுடன் துணை நிற்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *