நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், பவன் சாதினேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் தெலுங்கு திரைப்படம் “ஆகாசம்லோ ஒக தாரா’.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் சாத்விகா வீரவல்லி, ஸ்ருதி ஹாசன், ருஹானி சர்மா, ஸ்வாசிகா உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (நவ.18) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய துல்கர் சல்மான், “சென்னை எனக்குப் பிடித்தமான இடங்களில் ஒன்று. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் வெளியானபோது இங்குள்ள பத்திரிகையாளர்கள் அளித்த ஆதரவை என்னால் மறக்கவே முடியாது.
அந்தப் படத்தில் பெரிய நட்சத்திரப் பட்டாளம் கிடையாது. ஒரு சிறிய காதல் கதையாகவே விளம்பரப்படுத்தினோம். ஆனால், பத்திரிகையாளர் காட்சியைப் பார்த்துவிட்டு நீங்கள் எழுதிய விமர்சனங்களும் செய்திகளும்தான் அந்தப் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.