Dhoni: "நீங்கள் இல்லாமல் ஆட்டம் இனி பழைய மாதிரி இருக்காது; ஆனால்…" – தோனி குறித்து தனுஷ்

Spread the love

தோனி, 2020 ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார்.

ஆனாலும் தொடர்ந்து ஐ.பி.எல் போட்டிகளில் ஆடி வந்தார். தோனி தலைமையில் சென்னை அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது.

கடைசியாக 2023 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக கோப்பையை வென்று கொடுத்தார்.

தோனி - சிஎஸ்கே
தோனி – சிஎஸ்கே

இந்நிலையில் நேற்று (நவ.17) ஐ.பி.எல் போட்டியிலும் ஓய்வை அறிவித்துவிட்டார்.

தோனியின் இந்த ஓய்வு அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தோனியின் ஓய்வு குறித்து பலரும் பதிவிட்டு வரும் நிலையில் தனுஷும் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “சில வீரர்கள் நம்மைச் சந்தோஷப்படுத்துவார்கள். சிலர் நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாவே மாறிவிடுவார்கள். எம்.எஸ்.தோனி இது இரண்டுமாகவே இருந்திருக்கார்.

நீங்கள் இல்லாமல் ஆட்டம் இனி பழைய மாதிரி இருக்காது. இருந்தாலும், மைதானத்துக்கு வெளியில் வழிகாட்டியாக உங்களைப் பார்க்கக் காத்திருக்கேன்.

தோனி - சிஎஸ்கே
தோனி – சிஎஸ்கே

உங்கள் அறிவுரைகளாலும் அனுபவத்தாலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். அது வரும் தலைமுறையினரையும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி உத்வேகப்படுத்தும் என நம்புகிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *