AI வளர்ச்சியைப் பற்றி உலகம் முழுவதும் விவாதம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், இந்தக் கேள்விக்கு NVIDIA CEO Jensen Huang கொடுத்த பதில் இப்போது கவனம் பெற்றிருக்கிறது.
2030-ம் ஆண்டு உலகத்தின் முடிவாக இருக்காது. அதற்கான வாய்ப்பு 0%. இதுதான் Huang-ன் கருத்து.
தனியார் ஊடகம் ஒன்றிற்க்கு அளித்த பேட்டியில், 2030-க்குள் AI உலக அழிவுக்கு வழிவகுக்கும் என்ற கருத்தை தான் முற்றிலும் ஏற்கவில்லை என்று Huang தெரிவித்துள்ளார்.
ஆனால்…ஏன் இந்தக் கேள்வி எழுந்தது?
AI வளர்ச்சி வேகம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்த எச்சரிக்கைகளும் அதிகரித்துள்ளன.
Anthropic நிறுவனத்துடன் தொடர்புடைய சில AI safety researchers, மிகவும் சக்திவாய்ந்த AI systems எதிர்காலத்தில் மனிதர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சமீபத்தில் எச்சரித்திருந்தனர்.
Anthropic researcher Evan Hubinger, அடுத்த பத்தாண்டுக்குள் AI மனித அழிவுக்கு வழிவகுக்கும் வாய்ப்பு 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என்று தனிப்பட்ட கருத்தாக தெரிவித்திருந்தார். இது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கணிப்பு அல்ல.
இதையடுத்து, “AI development-ஐ இன்னும் வேகமாகத் தொடர வேண்டுமா அல்லது கொஞ்சம் slow down செய்ய வேண்டுமா?” என்ற விவாதம் தீவிரமானது.
“வேகத்தை குறைக்க வேண்டாம்!”
இந்தக் கேள்வியிலும் Jensen Huang-ன் நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது.
AI development-ஐ “as fast as we can” என்ற வேகத்தில் முன்னெடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால் அதற்கு ஒரு முக்கியமான நிபந்தனையையும் சேர்த்திருக்கிறார்.
வேகமாக வளர்ப்பது வேறு தயாராகாத, பாதுகாப்பற்ற AI product ஐ வெளியிடுவது வேறு.
Products ready ஆகும் முன்போ அல்லது unsafe ஆக இருக்கும்போதோ அவற்றை வெளியிடக்கூடாது என்பதையும் Huang வலியுறுத்தியுள்ளார்.