Ajinkya Rahane: "கேப் எண் 278 விடைபெறுகிறது!"- ஓய்வை அறிவித்த ரஹானே

Spread the love

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், டெஸ்ட் அணியின் தூணாக விளங்கியவருமான அஜின்கியா ரஹானே அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

ரஹானே
ரஹானே

இந்திய அணிக்காக 85 டெஸ்ட் போட்டிகள், 90 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் ரஹானே “கேப் எண் 278 விடைபெறுகிறது. நீங்கள் கொடுத்த அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி. என்றென்றும் நான் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஓய்வை அறிவித்திருக்கிறார்.

கிட்டத்தட்ட 17 வருட தனது கிரிக்கெட் வாழ்க்கையில், இந்தியாவின் டெஸ்ட் அணியில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்ததில் ரஹானே முக்கிய பங்காற்றியிருக்கிறார்.

ரஹானே
ரஹானே

குறிப்பாக, விராட் கோலி இல்லாத நேரத்தில் இந்திய டெஸ்ட் அணிக்குத் தலைமை தாங்கி, ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுச் சிறப்புமிக்க பார்டர்-கவாஸ்கர் கோப்பையை (2020-21) வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *