Aval Vikatan – 20 October 2026 – அவள் கனவு!

Spread the love

வானத்தை முட்டும் விமானத்தில் ஒருமுறையாவது பறக்க வேண்டும்… வீடு தாண்டி விரும்பிய இடத்தைப் பார்க்க வேண்டும்…

பிடித்தவரின் கையைப் பற்றி `உங்களால்தான் என் வாழ்க்கையே மாறியது” என்று சொல்ல வேண்டும்… ஐம்பது வயதில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டும்…

இப்படி ஏதோ ஓர் ஆசை, கனவு நம் ஒவ்வொருவருக் குள்ளும் ஓர் ஓரத்தில் ஒளிந்திருக்கும். `வீடு, பிள்ளைகள், செலவு… இதெல்லாம் நமக்கு எதுக்கு?’ என்று அதை நாமே தள்ளிவைத்திருப்போம். ஆனால், கனவு காணும் உரிமை எல்லோருக்கும் உண்டுதானே… அதை நனவாக்கும் உரிமையும்தான்.

உங்கள் கனவை இனியும் பூட்டிவைக்காதீர்கள். அவளிடம் சொல்லுங்கள்.

அதை நிறைவேற்ற உங்களோடு கைகோக்கிறது அவள் விகடன்.

உங்கள் கனவையும், அது ஏன் உங்களுக்கு முக்கியம் என்பதையும் எழுதி அனுப்புங்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் கனவுகள் நனவாகும் தருணம், அவள் விகடன் பக்கங்களில் உங்கள் அனுபவங்களோடு மலரும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

அவள் கனவு, அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *