டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், பா.ரஞ்சித், நடிகர் மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதில் பேசிய நடிகை ஆண்ட்ரியா, “இதான் என் முதல் போராட்டம். கடந்த ஒரு வாரமாக நான் அனைத்தையும் கவனித்துக்கொண்டே இருக்கிறேன்.

மாணவர்கள் போராட்டம் எங்கோ ஒரு இடத்தில் நடக்கிறது என்றாலும் நாம் இங்கு உணர்வுப்பூர்வமாக மிகவும் ஒன்றிப்போயிருக்கிறோம். எனக்கு மிகவும் பிடித்த ரவீந்திரநாத் தாகூரின் கவிதையிலிருந்து சில வரிகளை மட்டும் இங்குப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
`எங்கு மனது அச்சமின்றி இருக்கிறதோ, எங்கு தலை நிமிர்ந்து நிற்கிறதோ, எங்கு அறிவு அனைவருக்கும் விலையின்றிச் சுதந்திரமாகக் கிடைக்கிறதோ… அந்தச் சுதந்திர சுவர்க்கத்தில், என் தந்தையே, என் தேசம் விழித்தெழட்டும்” – அறிவு அனைவருக்கும் விலையின்றி கிடைக்கவேண்டும்.