9. பேரன், பேத்திகள் வரை தொடரும் சங்கிலி
ஒரு சிறந்த தம்பதி, வெறும் பிள்ளைகளை மட்டும் வளர்ப்பதில்லை; அவர்கள் “பெற்றோர்களை உருவாக்குகிறார்கள்”. தாங்கள் வளர்த்த பிள்ளைகள், நாளை தாங்களாகவே சிறந்த பெற்றோர்களாக மாறி, பேரன்-பேத்திகளை உருவாக்கும் அளவுக்குத் தகுதியுள்ளவர்களாக வளர்க்கிறார்கள்.
இப்படி, ஒரு தம்பதியின் அன்யோன்யத்தில் தொடங்கும் காதல், பல தலைமுறைகளைக் கடந்து அந்த இனத்தின் ஆரோக்கியமான இருப்பைத் தொடரச் செய்கிறது. இ்ங்கு தான் “கல்வி” யின் முக்கியத்துவம் பூர்த்தியடைகிறது. இதில், இன்றைய கல்வியினை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களின் நிலைமை கேள்வி குறியே?
10. சமூக சங்கிலியின் உறுதி
சமூகத்தின் படிநிலை என்பது நல்ல பெற்றோர்கள் → நல்ல வீடு → நல்ல தெரு → நல்ல ஊர் → நல்ல மாவட்டம் → நல்ல மாநிலம் → நல்ல நாடு → நல்ல உலகம்.
இந்தச் சங்கிலியில் எந்தப் புள்ளியில் ஒரு தந்தை (ஆண்) அல்லது தாய் (பெண்) தன் ஆன்யோனத்திலிருந்தும் கடமையிலிருந்தும் தவறினாலும், அது ஒட்டுமொத்த சங்கிலியையும் பலவீனப்படுத்துகிறது அல்லது அறுந்துப்போகிறது. இவை அதிகாரம், பணம் மற்றும் புகழைத் துரத்துவதை விட்டுவிட்டு, மானுடத்தை நல்வழிப்படுத்தும் தகவல்களைப் பரப்புவதற்கே தகவல் பரிமாற்ற தளங்களை அனைவரும் பயன்படுத்த வேண்டும்.
எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக அறிந்து, புரிந்து செய்து முடிக்க வேண்டும் என்ற முனைப்பு எப்படி ஒரு வேலைக்குத் தேவையோ, அதேபோல் “பெற்றோராக இருப்பதற்கு” அந்த முனைப்பு இன்னும் பன்மடங்கு தேவை. அரசன் முதல் ஆண்டி வரை, அனைவரும் பெற்றோர்கள் தான். அனைவரும் இந்த அறத்தைப் பின்பற்றினால், நாம் தேடும் “மகிழ்ச்சியான உலகம்” வேறெங்கும் இல்லை; அது நம் வீட்டிற்குள்ளேயே இருக்கிறது.
“கலியுகம்” என்பது காலம் அல்ல; அது விழிப்புணர்வு இல்லாத ஒரு மனநிலை. சாதனையாளர்களைப் பெற்றெடுப்பதும், சூரையாடுபவர்களைப் பெற்றெடுப்பதும் அந்த அன்யோனியத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் ‘வளர்ப்பு முறை’யே ஆகும்.
மானுடம் தன் சுயநல மமதையைத் துறந்து, ஒவ்வொருவரும் இந்த உலகில் பெற்றெடுத்தன் நோக்கத்தை உணர்ந்து, இயற்கையோடு இயைந்து, அன்பையும் அறத்தையும் விதைத்து மகிழ்ச்சியுடன் வாழ வழியினை வகுக்கவேண்டும் என்பதே நம் முன்னோர்களின் எண்ணங்கள்.
மானுடம் உணர்ந்தால்… கலியுகம் மறையும்; அறம் மலரும்!