Biggboss: “என்னையும்தான் கிழவன் என்றார்கள்” – நிகழ்ச்சிக்கு நடுவே சட்டையை கழற்றிய சல்மான் கான்! | Actor Salman Khan suddenly taking off his shirt has gone viral.

Spread the love

ஒருவர் எப்படி இருக்கிறார், அவரது எடை, தோற்றம், குடும்பம் மற்றும் சிரிப்பைக்கூடக் கேலி செய்கிறார்கள். பிறரின் தோல்வியைக் கொண்டாடுவதிலும், உருவக் கேலி செய்வதிலும் இவர்களுக்கு என்ன மகிழ்ச்சியோ தெரியவில்லை. ஒரு பெண் தாயாகும்போது உடல் எடை அதிகரிப்பது இயல்பான ஒன்று. பிரசவத்திற்குப் பின் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட விரும்புவது அவரது உரிமை. மீண்டும் படப்பிடிப்பிற்கு வரும்போது அவர் பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார்.

கத்ரீனா கைஃப்

கத்ரீனா கைஃப்

இதற்கெல்லாம் ட்ரோல் செய்வது மிகவும் அருவருப்பானது. என்னைக்கூட 60 வயதாகிவிட்டது, கிழவன் ஆகிவிட்டான் என்று கூறுகிறார்கள். ‘மைனே பியார் கியா’ காலத்தில் இருந்தது போலவே எப்போதும் இருக்க முடியாது.” என ஆவேசமாகப் பேசியபடி, சட்டையைக் கழற்றினார்.

சமீபத்தில் பிரசவத்திற்குப் பிறகு உடல் எடை கூடியதற்காக இணையத்தில் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்த பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபுக்கு ஆதரவாக சல்மான் கான் குரல் கொடுத்திருப்பது, தற்போது இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *