திரிணாமுல் கட்சியில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை எங்களுக்கு இருப்பதால், ஜூலையில், எங்களுக்கு திரிணாமுல் (பெயர்) மற்றும் சின்னத்தை வழங்க கோரிக்கை வைப்போம். பின்னர் நீதிமன்றம் முடிவு செய்யும்,” கூறினார். அதிருப்தி எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகரை சந்தித்து பேசுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கீர்த்தி ஆசாத் மற்றும் சகாரிகா கோஷ் ஆகியோர் சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து கடிதம் ஒன்றை கொடுத்தனர்.
அதில் அதிருப்தி அணியின் தனி அணி கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் அதன் சொந்த சட்டதிட்டங்களின் படி செயல்படவில்லை என்று அதிருப்தி கோஷ்டியினர் தெரிவித்துள்ளனர். கட்சியின் விதிகளை மீறி பல முடிவுகளை மம்தா பானர்ஜியும் அபிஷேக் பானர்ஜியும் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கிறார்கள் என்று அவர்கள் குற்றம் சாட்டி இருக்கின்றனர்.
அதிருப்தி எம்.பி அருப் சக்ரவர்த்தி இது குறித்து கூறுகையில்,”முதல்முறை எம்.பியான சயோனி கோஷ் எங்கள் தலைவர். வங்காள முதல்வர் தலைமையில், எங்கள் இரட்டை எஞ்சின் அரசு தேசத்தின் நலனுக்காக உழைக்க விரும்புகிறது…. பாஜக எங்கள் உதவியைக் கேட்டால், நாங்கள் அவர்களுக்கு உதவுவோம். அவர்களின் உதவி தேவைப்பட்டால், நாங்கள் அதைக் கேட்போம்.”என்று தெரிவித்தார்.
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், எல்ஜேபி ஆகிய கட்சிகளின் முன்மாதிரிகளை பின்பற்றி திரிணாமுல் கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு கட்சியில் இணைந்த பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு உரிமை கோருவது எந்த அளவில் சாத்தியமாக அமையும் என்று தெரியவில்லை. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் தனியாக வேறு எந்த கட்சியிலும் சேராமல் நேரடியாக கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரினர் என்பது குறிப்பிடத்தக்கது.