‘Cheap CM-இன் Sticker ஆட்சியில்.!’- முதல்வரை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்| dmk udhayanidhi stalin slams cm vijay

Spread the love

கோவையின் புதிய அடையாளமாக ரூ. 300 கோடியில் கட்டப்பட்டிருக்கும் பெரியார் அறிவு நூலகத்தை இன்று (அக்.16) முதல்வர் விஜய் திறந்து வைத்திருக்கிறார்.

இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்யை விமர்சித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” நம் திராவிட மாடல் ஆட்சியில் ரூ.290 கோடி மதிப்பில் கோவையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையம் இன்று திறக்கப்படுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

இந்த மாபெரும் அறிவுச்சுரங்கத்தை கோவை வாழ் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வாழ்த்துகிறோம்.

வழக்கமாக கழக அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்பவர்கள், இந்த முறை பெரியார் அறிவுலகத்தில் ’நான் முதல்வன்’என்ற பெயரின் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து இருக்கிறார்கள்.

இந்த Cheap CM-இன் Sticker ஆட்சியில், நான் முதல்வன் திட்டத்தைச் சிதைத்ததோடு மட்டுமின்றி, அதன் பெயரைக்கூட ஏற்க மனமில்லை என்றால் என்ன காரணம்?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *