சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. குறிப்பாக, வடசென்னையில் குறுகிய நேரத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இந்நிலையில், நள்ளிரவில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சென்னை ரிப்பன் பில்டிங்கில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.

ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, “வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகளை கடந்த இரண்டு மாதங்களாக செய்து கொண்டிருக்கிறோம். நேற்று பெய்திருப்பது வழக்கமான மழை இல்லை. வடகிழக்குப் பருவமழை சமயத்தில் சென்னையில் மொத்தமாக 69 செ.மீ மழைதான் பெய்யும். ஆனால், நேற்று மாலை 6 மணியிலிருந்து இரவுக்குள் 35.2 செ.மீ மழை பெய்துள்ளது. மேக வெடிப்பு என சொல்கின்றனர். அதைப் பற்றிய தகவல் கிடைத்தவுடன் பகிர்வோம்.