நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகளில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என சிஜேபி அமைப்பு டெல்லியில் போராட்டத்தை முன்னெடுத்தது.
இந்தப் போராட்டத்தைக் கலைக்க மத்திய அரசு காவல்துறையை ஏவி பெரும் அடக்குமுறையைக் கையாண்டிருக்கிறது.
இந்த நிலையில், மதுரை எம்.பி.சு வெங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “நீட் தேர்வு ரத்து, புதிய கல்விக்கொள்கை ரத்து, தர்மேந்திர பிரதான் ராஜினா உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தை நோக்கி பேராணியை முன்னெடுத்தனர்.
அதே நேரம், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற அவையில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குழு அவை ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகரிடம் வழங்கினோம். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையின் மையத்தில் போராட்டத்தை நடத்தினோம்.
அதைத் தொடர்ந்து அவை 30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. வழக்கமாக அவை ஒத்திவைப்பு என்பது 1 மணி நேரம் அதற்கு மேலான நேரமாகத்தான் ஒத்திவைக்கப்படும். ஆனால் இன்று ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் அவை ஒத்திவைக்கப்பட்டது.