புதுச்சேரியில் தனி cloud kitchen `Alex Crousty”-ன் பின்னல் இருக்கும் 30 ஆண்டுகால Chef Alexandre Kerbouz-ன் பயணம்.
பிரான்ஸில் பிறந்து, சமையல் உலகில் சுமார் 30 ஆண்டுகள் பயணித்த ஒருவர், இன்று புதுச்சேரியின் தெருக்களில் தனது சமையலின் திறமையை காட்டி வருகிறார்.
ஒரு காலத்தில் பாரிஸ், மும்பை எனப் பல நகரங்களில் சமயலறைகளில் தனது திறமையை வெளிப்படுத்திய பிரெஞ்சு செஃப், இன்று புதுச்சேரியில் ஒரு சிறிய cloud kitchen மூலம் தனது சொந்த உணவு பிரண்டை உருவாக்கி கொண்டிருக்கிறார். அவர் தான் “Alex Crousty-ன் நிறுவனர் செஃப் அலெக்சாண்டர் கெர்போஸ்”.
14 வயதிலிருந்தே சமையல் துறையில் பயணிக்கும் இவர், பிரான்ஸில் உள்ள பிரபலமான ‘Paul Bocuse Institute-ல் 2020-21-ல் பயிற்சி பெற்றவர். மேலும் பாரிஸில் உள்ள பிரபலமான ‘Silencio Club Restaurant ‘, Ramen-க்கு பெயர் பெற்ற ‘Kodawari Restaurant’ மற்றும் 2019-ல் மும்பையின் பிரெஞ்சு உணவகமான “Soufflé S’il Vous Plaît”-ன் செஃப் ஆக பணியாற்றியவர்.
இந்தியாவில் பணியாற்ற வேண்டும் என்ற நீண்ட நாள் கனவுடன் வந்த இவருக்கு, கொரோனா ஒரு கட்டத்தில் பிரான்ஸுக்குத் திரும்பும் சூழலை ஏற்படுத்தியது. ஆனால் இந்தியா மீதான ஈர்ப்பு அவரை மீண்டும் இங்கே அழைத்துவந்தது.
புதுச்சேரியில் சொந்தமாக ஏதாவது ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ‘Alex Crousty’ பிறந்தது. இது மொறுமொறுப்பான சிக்கன் மற்றும் சாதம் ஆகியவற்றை கொண்ட ஒரு உணவு.
Crousty சிக்கன் என்பது தாய்லாந்து உணவு வகையாகும். ஆனால், அதை அப்படியே எடுத்துக்கொள்ளவில்லை. இந்தியர்களின் சுவைக்கு ஏற்றவாறு அதன் செய்முறையை மாற்றி, தனது அனுபவத்தையும் வாடிக்கையாளர்களின் கருத்துக்களையும் சேர்த்து புதிய வடிவத்தை உருவாக்கியுள்ளார். அது தான் இதை தனித்துவமாக்குகிறது. அதனால் தான் தற்போது இந்த உணவை புதுச்சேரியில் மட்டுமே சுவைக்க முடிகிறது. பெரிய உணவகமும் இல்லை, பெரிய சமையல் குழுவும் இல்லை. தற்போது இந்த உணவை தயாரிப்பது இவர் ஒருவர் தான்.

ஒரு நாளைக்கு சுமார் 30 ஆர்டர்கள் வரை கிடைத்து வரும் நிலையில், தொழில் வளர்த்தால் உதவியாளர்களை நியமித்து அவர்களுக்குத் தானே பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளார். சிறிய அளவில் தொடங்கிய இந்த முயற்சி, இப்போது படிப்படியாக வளர்ந்து வருகிறது.
Takeaway-க்கு சிறிய Crousty Box ரூ.299-க்கும், பெரிய Box ரூ.499-க்கும் கூடுதல் சிக்கன் வேண்டுமென்றால் ரூ.140 என்று தான் செய்யும் உணவின் விலை பற்றியும் கூறி இருந்தார்.