ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே-18) ஆட்டத்தில் சென்னை அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது சென்னை அணி.
இதன் மூலம் சென்னை அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்நிலையில் தோல்விக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் அணியின் கேப்டன் ருதுராஜ் மற்றும் தோனி குறித்து பயிற்சியாளர் பிளெமிங் பேசியிருக்கிறார்.
“கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவரான எம்.எஸ். தோனி இவ்வளவு காலம் வழிநடத்திய ஒரு ஃபிரான்சைஸை ஒரு புதிய கேப்டனிடம் ஒப்படைப்பது என்பது ஒரு மிகப்பெரிய மாற்றமாகும்.
அதனால் அணியின் முன்னேற்றத்திற்கு சற்று காலம் எடுக்கும். ஆனால் ருதுராஜ் தனது வேலையைச் சிறப்பாகச் செய்து வருகிறார். இந்த அணியில் உள்ள வீரர்கள் மீது அவர் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்.