CWG: வெள்ளி, வெண்கலம்! – டிரிபிள் ஜம்ப் போட்டியில் இரண்டு பதகங்களை வென்ற தமிழக வீரர்கள்| CWG 2026 : Tamil Nadu athletes win two medals in the triple jump event

Spread the love

பிரவீன் சித்ரவேல்

24 வயதான பிரவீன் சித்ரவேல், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். விவசாயக் கூலித் தொழிலாளியின் மகனான இவர், 2018 கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் கவனம் பெற்றார்.

அதே ஆண்டில் யூத் ஒலிம்பிக்கில் டிரிப்பிள் ஜம்ப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார். தற்போது தேசிய சாதனையாளராகவும், ஒலிம்பியனாகவும் இருக்கும் பிரவீன், ஏற்கெனவே ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம், ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி, FISU உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

செல்வ பிரபு திருமாறன்

செல்வ பிரபு திருமாறன்

செல்வ பிரபு திருமாறன்

மதுரையைச் சேர்ந்த செல்வ பிரபு திருமாறனும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவரே. 2022 உலக ஜூனியர் (U-20) தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற இவர், பின்னர் ஆசிய தடகள சங்கத்தின் சிறந்த 20 வயதுக்குட்பட்ட ஆண் வீரர் விருதையும் பெற்றார்.

அமெரிக்காவின் கான்சாஸ் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று வரும் அவர், இந்த ஆண்டின் NCAA Division I வெளிப்புற தடகள சாம்பியன்ஷிப்பிலும் பட்டம் வென்று, 17 மீட்டர் தடையைத் தாண்டிய இந்திய வீரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.

2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் டிரிப்பிள் ஜம்ப்பில் எல்தோஸ் பால் தங்கமும், அப்துல்லா அபூபக்கர் வெள்ளியும் வென்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து, 2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியிலும் டிரிப்பிள் ஜம்ப்பில் இந்தியா இரண்டு பதக்கங்களை வென்றிருப்பது, இந்தப் பிரிவில் இந்தியா தொடர்ந்து வலுவான அணியாக உருவெடுத்து வருவதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *