‘Dimagi Naxal Party’ emerges online amid row over Modi’s remark | CJP பாணியில் ‘Dimagi Naxal Party’ – ஒரே நாளில் 1.6 லட்சம் பேர் ஃபாலோ; ஆனால் இப்போது? என்ன ஆனது DNP?

Spread the love

சமூக வலைதளங்களில் புதிதாக உருவான ஒரு Instagram பக்கம், தொடங்கிய ஒரே நாளில் 1.6 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்களை பெற்றது. அதைவிட ஆச்சரியம்… வேகமாக வைரலான அந்தப் பக்கம், அதே வேகத்தில் தற்போது காணாமல் போயிருக்கிறது.

‘Dimagi Naxal Party’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருந்த இந்த Instagram கணக்கில் 62 பதிவுகள் இருந்ததாகவும், 35 கணக்குகளை அது ஃபாலோ செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Instagram-ன் தகவல்படி, இந்தக் கணக்கு ஆகஸ்ட் மாதத்தில்தான் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், அதன் பயனர் பெயர் ஒருமுறை மாற்றப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. ஆனால், இந்தக் கணக்கை யார் இயக்கியது என்பது குறித்த எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

இந்தப் பெயர் திடீரென கவனம் பெற முக்கிய காரணமாக அமைந்தது பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை. ஆகஸ்ட் 15-ம் தேதி செங்கோட்டையில் பேசிய அவர், ஆயுதம் ஏந்திய நக்சலிசத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டதுடன், ‘Dimagi Naxals’ (அறிவுசார் நக்சல்கள்)எனக் குறிப்பிட்டு புதிய வகையான அச்சுறுத்தல் குறித்தும் எச்சரித்திருந்தார்.

இதையடுத்து, அந்த வார்த்தையையே பெயராகக் கொண்ட Instagram பக்கம் திடீரென உருவாகி, மிகக் குறுகிய காலத்தில் லட்சக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்தது.

இந்தக் கணக்கு யாருடையது? ஏன் தொடங்கப்பட்டது? இவ்வளவு வேகமாகப் பிரபலமான பிறகு ஏன் காணாமல் போனது? — இதற்கான தெளிவான பதில்கள் இதுவரை வெளியாகவில்லை.

முன்னதாக, உச்ச நீதிமன்ற நீதிபதி அவர்களின் கருத்தின் அடிப்படையில் கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி எனும் சமூக ஊடகம் தொடங்கப்பட்டு, பின்னர் அது களத்தில் நீட் தேர்வு முறைகேடுக்கு எதிராக பேராடி கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது அனைவரும் அறிந்ததே. அதே பாணியில் இந்த பக்கமும் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *