Disclosure Day Review: ஏலியன்ஸ் குறித்த ரகசியங்களை வெளிக்கொண்டு வருகிறாரா ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்? | Disclosure Day Review: Steven Spielberg’s Aliens & UFO Secrets Thriller with Emily Blunt

Spread the love

சயின்ஸ் பிக்ஷன் – ஏலியன்ஸ் காம்போவில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படம் என்றாலே அதற்கு எனத் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ஏலியன்கள் குறித்து அவர் எடுத்த ‘Close Encounters of the Third Kind’, ‘E.T. (Extra Terrestrial), ‘War of the Worlds’ என அனைத்துமே இன்றுவரை கிளாசிக்காகக் கொண்டாடப்படுகின்றன. அப்படிப்பட்ட தன் ஃபேவரைட் ஜானருக்குள் மீண்டும் நுழைந்திருக்கிறார் ஸ்பீல்பெர்க்!

உலகமே மூன்றாம் உலகப்போர் குறித்த அச்சத்திலிருக்க, ‘வார்டெக்ஸ்’ (Wartex) என்ற நிறுவனத்தின் ரகசிய, பாதுகாக்கப்பட்ட கோப்புகளையும், ஒரு மர்மமான கருவியையும் திருடிவிடுகிறார் அந்நிறுவனத்தின் சைபர் செக்யூரிட்டியில் பணியாற்றும் டேனியல் கெல்னர் (ஜாஷ் ஓ’கானர்). அவரை அந்நிறுவனத்தின் சிஇஓ (காலின் ஃபிர்த்), தன் படைகளுடன் துரத்த, தன் காதலியுடன் தப்பி ஓடுகிறார் கெல்னர்.

மறுபுறம் கான்சாஸ் நகரத்தில், டிவி வானிலை அறிவிப்பாளராக இருக்கும் மார்க்கரேட் ஃபேர் சைல்டுக்கு (எமிளி பிளன்ட்) திடீரென அதீத நுண்ணறிவுத்திறன், ஒருவரைப் பார்த்தவுடன் அவர்களின் வரலாற்றையே அறிந்துகொள்ளும் திறன் போன்றவைக் கிடைக்கின்றன. கெல்னர் திருடிய ஃபைல்களில் இருக்கும் ரகசியம் என்ன, அவரை வழிநடத்துவது யார், மார்க்கரேட்டின் சக்திகள் இவர்களுக்கு எப்படி உதவப்போகின்றன என்பதை ஆக்ஷன் த்ரில்லராக சயின்ஸ் ஃபிக்ஷன் மசாலா தடவி பரிமாறியிருக்கிறார் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *