Durai Vaiko says the DMK has been trying to destroy the MDMK for 33 years-மதிமுகவை அழிக்க 33 ஆண்டுகளாக முயற்சி செய்தது திமுக என்கிறார் துரை வைகோ

Spread the love

முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய் அமர்ந்து விடக்கூடாது என்பதற்காக அ.தி.மு.க, தி.மு.க., கூட்டணி ஆட்சி அமைக்க முயன்ற காரணத்தால்தான் அ.தி.மு.க.,வின் முன்னணித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் வெளியேறி த.வெ.கவில் இணைந்துள்ளனர். அ.தி.மு.க., மூலம் பா.ஜ.க., தமிழகத்திற்குள் நுழைந்து விடுவார்கள் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, போன்ற பொதுவுடைமை இயக்கங்கள் தி.மு.க., கூட்டணியில் பயணித்தோம்.

ஆனால், தேர்தல் முடிந்து அதி.மு.க., ஆட்சி அமைக்க தி.மு.க., ஆதரவு கொடுக்க முயன்றது இரு கட்சியினரிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்த உடன்பாடை மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஒப்புக் கொள்வார்களா?

துரை வைகோ செய்தியாளர் சந்திப்பு

துரை வைகோ செய்தியாளர் சந்திப்பு

அந்த ஒற்றை காரணத்திற்காத்தான் இன்றைக்கு அ.தி.மு.க.வினர் த.வெ.க.,வில் இணைகிறார்கள். ம.தி.மு.கவை அழிக்க வேண்டும் என்று 33 ஆண்டுகளாக தி.மு.க முயற்சி செய்கிறது. நாங்கள் எதிரணியில் இருக்கும்போதும் சரி, அவர்களுடன் பயணிக்கும்போதும் சரி எங்களை அழிப்பதற்கு அத்துணை முயற்சிகளும் எடுத்தார்கள். பா.ஜ.கவில் அண்ணாமலை இணைந்ததும் அந்தக்கட்சி வேகமாக வளரக்கூடிய சூழ்நிலை இருந்தது. திராவிட இயக்கங்களுக்கு நாம் பாதுகாவலராக இருக்க வேண்டும், தி.மு.க., உள்ளிட்ட சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற கருத்தோடு திமுக., கூட்டணியில் இருந்தோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *