E20 பெட்ரோல்: `நாட்டின் முன்னேற்றமா? வாகனங்களுக்கு பேராபத்தா?’ – கள நிலவரம் என்ன?| ஓர் அலசல்| E20 Petrol: ‘National Progress or a Major Threat to Vehicles?’ – What is the Ground Reality? | An Analysis

Spread the love

மேலும், ஒவ்வொரு வாகனத்திற்கும் அதன் எரிபொருள் Compatibility குறித்து வாகன உற்பத்தியாளர்கள் தெளிவான தகவல்களை வழங்க வேண்டும். நுகர்வோருக்கும் சரியான தகவல்கள் கிடைக்க வேண்டும். எரிபொருளின் தரம் மற்றும் சேமிப்பு முறைகள் முறையாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.” என்றார்.

பைக்குகள்

பைக்குகள்

E20 எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டம், நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதிச் சுமையைக் குறைக்கவும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் ஒரு முக்கியமான முயற்சியாகும். இருப்பினும், பழைய வாகனங்களில் ஏற்படும் இன்ஜின் கோளாறுகள், மைலேஜ் குறைவு மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் பராமரிப்புச் சவால்கள் போன்ற நடைமுறைச் சிக்கல்கள் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. எனவே, அரசு, வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் இணைந்து கடுமையான தரக்கட்டுப்பாட்டை அமல்படுத்தி, தொழில்நுட்பக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

அதேவேளையில், நுகர்வோருக்குத் தூய்மையான பெட்ரோலைத் தேர்வு செய்யும் உரிமையையும், வெளிப்படையான விழிப்புணர்வையும் வழங்குவதே இத்திட்டத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிசெய்வதற்கான நிலையான தீர்வாக அமையும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *