உலகின் சிறந்த உணவுகள் பட்டியலில் இடம்பிடித்த இந்திய உணவு … எது தெரியுமா? – Kumudam

Spread the love

உலகில் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலமான கடல் உணவு வகைகளை  TasteAtlas தரவரிசைப்படுத்தியதில் இந்த பட்டியலில் இந்தியாவின் கேரளா பாரம்பரிய உணவான கரிமீன் பொள்ளிச்சத்தும் இடம்பெற்று நிலையில் இந்திய உணவுப் பிரியர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கரிமீன் பொள்ளிச்சத்து என்றால் என்ன? அப்படி என்னதான் உள்ளது இந்த உணவில்?

‘Pearl Spot’ எனப்படும் கரிமீன், மசாலாப் பொருட்களில் நன்றாக ஊறவைக்கப்பட்டு தேங்காய் எண்ணெயில் லேசாகப் பொரிக்கப்படுகிறது. பின்னர் வெங்காயம்,தக்காளி மற்றும காரம்,புளிப்பு கலந்த மசாலா பூசப்பட்டு  பின்னர் அதனை வாழை இலையில் சுற்றி தவாவில் மெதுவாக வறுக்கப்படுகிறது.

இதன் சுவையும் மணமும் நிறைந்த இந்த உணவு,கேரளாவின் ஆலப்புழா,கோட்டயம்,கொச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் மிகவும் பிரபலமாக அனைவரும் ருசிச்சு சாப்பிடக் கூடிய அளவில் இந்த அனைவரின் favourite listல் ஒன்றாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக வாழை இலையில் சமைக்கப்படுவது இதன் தனிச்சிறப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சமீபத்தில் TasteAtlas  வெளியிட்ட உலகின் அதிக துர்நாற்றம் வீசும் உணவுகள் பட்டியலில் பெருங்காயம் இடம் பெற்றது இந்திய உணவுப் பிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. ஏனென்றால் அனைந்து உணவுகளிலும் வாசனை மற்றும் ருசிக்காகவும், செரிமானத்திற்காகவும் அதிக பயன்பாட்டில் இருப்பது பெருங்காயம். ஆனால் இது துர்நாற்றம் வீசக்கூடிய உணவுகளில் இது இடம்பெற்றது உணவு பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது கேரளாவின் பாரம்பரிய உணவான கரிமீன் பொள்ளிச்சத்துக்கு உலகளவில் 49 வது இடம் கிடைத்திருப்பது இந்திய உணவுப்பிரியர்களை மகிழ்ச்சியடைச் செய்துள்ளது. குறிப்பாக ஜப்பான்,மெக்சிகோ, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரபலமான கடல் உணவுகளுடன் இந்தியாவின் கரிமீன் பொள்ளிச்சத்தும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *