ஈரான் போர் தொடங்கியதில் இருந்து உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதில் இந்தியா விதிவிலக்கல்ல.
கச்சா எண்ணெய் நெருக்கடி சூழலைச் சமாளிக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளைச் செய்தது. அதில் ஒன்றுதான் பெட்ரோலில் 20 சதவிகித எத்தனாலைக் கலப்பது ஆகும்.
பெட்ரோலில் எத்தனால் கலக்கும்போது, வாகனத்தின் செயல்திறன் குறைகிறது என்கிற எதிர்ப்பு குரல் நாடு முழுவதும் எழுந்தது.
தற்போது நடந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பெட்ரோலில் எத்தனால் கலப்பது குறித்தான கேள்வி போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் எழுப்பப்பட்டது.

“‘இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் E20 எரிபொருளின் தாக்கங்களை மதிப்பிடுவதற்கான ஆய்வு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL), இந்திய பெட்ரோலிய நிறுவனம் (IIP), இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) மற்றும் இந்திய ஆட்டோமோட்டீவ் ஆராய்ச்சி சங்கம் (ARAI) ஆகிய அமைப்புகளால் இணைந்து நடத்தப்பட்டது.
வாகனங்களின் புகை உமிழ்வு அதற்கான உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டே உள்ளது.