Eight Members of the Same Family Perish in Delhi Hotel Fire While Attempting to Spend More Time with Elder Relative -முதியவருடன் அதிகநேரம் செலவிட நினைத்து டெல்லி தீபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி

Spread the love

டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள மால்வியா நகரில் ஹோட்டல் ஒன்றில் நேற்று திடீரென தீப்பிடித்துக்கொண்டதில் 21 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்களில் அதிகமானோர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆவர். இந்த தீவிபத்தில் குருகிராமை சேர்ந்த ஆடிட்டர் விவேக் அகர்வால் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தீவிபத்து ஏற்பட்ட ஹோட்டலுக்கு அருகில் இருக்கும் மேக்ஸ் மருத்துவமனையில் விவேக் அகர்வாலில் தந்தை ராதேஷ்யாம்(75) சிகிச்சை பெற்று வந்தார். அவரை காண உறவினர்கள் வந்திருந்தனர். ராதேஷ்யாம் அதிக நாட்களுக்கு உயிரோடு இருக்க வாய்ப்பு இல்லை என்று டாக்டர் தெரிவித்துவிட்டார். இதையடுத்து அவர் உயிரோடு இருக்கும் சில நாட்களில் அதிகமான நேரத்தை அவருடன் செலவிட அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இதற்காக குடும்ப உறுப்பினர்கள் ராஜஸ்தான், பெங்களூரு மற்றும் குர்கானில் இருந்து டெல்லிக்கு வந்து மருத்துவமனையில் இருந்தனர். ராதேஷ்யாமின் மனைவி பிரேம்லதா (75), மகன் விவேக் (48), மருமகள் தர்ஜனி (47), பேத்தி வர்யா, முத்து (16) ஆகியோர் குர்காவில் இருந்து வந்திருந்தனர்.

அவரது மூத்த பேத்தி ஜிவிஷா (20) சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்து விமானம் மூலம் வந்திருந்தார். அவர்கள் அனைவரும் தீ விபத்தில் பலியாகிவிட்டனர். ஜிவிஷா பெங்களுருவில் பிடெக் படித்து வந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இருந்து வந்த பிரேம்லதாவின் சகோதரி கம்லா, அவரது சகோதரர் அசோக் மற்றும் மைத்துனர் ஜாவேரி ஆகியோரும் அந்த ஹோட்டலில் தங்கியுள்ளனர். அவர்கள் முன்னதாகவே வீடு திரும்ப திட்டமிட்டிருந்தனர், ஆனால் அவர்கள் தங்கியிருப்பதை நீட்டிக்க குடும்பத்தினர் அவர்களை வற்புறுத்தினர். கமலா மற்றும் அசோக் தீயில் இறந்தனர். ஜாவேரி இன்னும் காணவில்லை. இது குறித்து ராதேஷ்யாமின் உறவினர் ஒருவர் கூறுகையில்,”சில நாட்களாக நாங்கள் இங்கு இருந்தோம், அப்போது ராதேஷ்யாமின் அதிக நாட்கள் உயிரோடு இருக்கமாட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து குடும்பத்தினர் அவருடன் முடிந்தவரை அதிக நேரம் செலவிட முடியும் என்று கருதி அருகில் உள்ள ஹோட்டலில் அறைகள் முன்பதிவு செய்திருந்தோம்” என்று 59 வயதான லதா அகர்வால் கூறினார். இந்த சோகம் குறித்து குடும்பத்தினர் இதுவரை சிகிச்சை பெற்று வரும் ராதேஷ்யாமிற்கு தெரிவிக்கவில்லை. இப்போது குடும்பத்தில் ராதேஷ்யாம் மட்டும் உயிரோடு இருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *