1990ஆம் ஆண்டுக்குப் பின் அந்த அணி உலகக்கோப்பையில் வென்றதே இல்லை என்பதால், இந்த 36 ஆண்டு கால ஏக்கத்தைத் தீர்த்த வெற்றியை மைதானத்தில் திரண்டிருந்த 30,000-க்கும் மேற்பட்ட ஸ்காட்லாந்து ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.
உலகத் தரவரிசையில் 83-வது இடத்தில் இருக்கும் ஹைட்டி அணி, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஸ்காட்லாந்துக்குக் கடும் சவால் அளித்தது.
குறிப்பாக ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் ஹைட்டி வீரர் ஃபிரான்ஸ்டி பியரோட் தலையால் முட்டிய பந்து, ஸ்காட்லாந்து கோல்கீப்பர் அங்கஸ் கன்னையும் தாண்டி நூலிழையில் வெளியேறியதால் ஸ்காட்லாந்து அணி நிம்மதி பெருமூச்சு விட்டது.
இறுதியில் 1-0 என்ற கணக்கில் ஸ்காட்லாந்து வெற்றி பெற்றது. இதே பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் பலம் வாய்ந்த பிரேசில் மற்றும் மொராக்கோ அணிகள் 1-1 எனச் சமன் செய்ததால், தற்போது 3 புள்ளிகளுடன் ஸ்காட்லாந்து அணி ‘குரூப் சி’ பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
தனது அடுத்த லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி, மொராக்கோவை எதிர்கொள்ள உள்ளது.